ஐபிஎல் 2024 தொடரின் 17-வது சீசன் தொடங்குவற்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளன. ஐபிஎல் ஏலம் தொடங்குவதற்கு முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து டிரேட் முறையில் ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு திரும்பினார். மேலும், ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா அறிவிக்கப்பட்டார்.
கடந்த 10 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிறப்பாக விளையாடி 5 முறை டிராபியை வென்று கொடுத்த ரோகித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியது குறித்து ரசிகர்கள் விமர்சனம் செய்தனர். இந்நிலையில், மும்பை கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளதால், ரோகித் ரசிகர்களின் கோபம் அதிகரித்துள்ளது.
சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில், ரோஹித் பற்றிய கேள்விகளை ஹர்திக் பாண்டியா மற்றும் பயிற்சியாளர் பௌச்சர் இருவரும் தவிர்த்துவிட்டனர். இதனால், ரசிகர்கள் இன்னும் கோபத்தில் உள்ளனர். இந்நிலையில், ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக #”RIP HARDIK PANDYA” என்ற ஹேஷ்டேக்கை ரோகித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
Read More : தேர்தல் விதிகளை மீறிய பிரேமலதா விஜயகாந்த்..!! காவல்நிலையத்தில் பரபரப்பு புகார்..!!