fbpx

RIP|நடிகர் காளி வெங்கட் தாயார் காலமானார்!. பிரபலங்கள் இரங்கல்!

RIP: பிரபல குணச்சித்திர நடிகர் காளி வெங்கட்டின் தாயார், உடல்நலக் குறைவால் காலமானார். திரைபிரபலங்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஒரு சில நடிகர்கள் எந்த கேரக்டர் கொடுத்தாலும் அந்த கேரக்டர் ஆகவே வாழ்ந்து விடுகிறார்கள். அந்த வகையில் நடிகர் காளி வெங்கட் தான் நடிக்கும் திரைப்படங்கள் மூலமாக அதிகமாக மக்களை கவர்ந்து வருகிறார். அதிலும் சமீபத்தில் அவர் நடித்த தங்கபுள்ள… என்ற வசனம் பெரிய அளவில் பேசப்பட்டு ட்ரெண்டானது. அதுபோல சமீபத்தில் வெளியான லப்பர் பந்து திரைப்படத்திலும் யதார்த்தமாகவும் நம்முடைய பக்கத்து வீட்டு நபர் போலவும் இயல்பாக நடித்திருந்தார். குணச்சித்திர வேடங்கள் மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் கொடி, சார்பட்டா பரம்பரை, ராட்சசன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவருடைய தாயார் விஜயலட்சுமி நேற்று இரவு உடல்நலக் குறைவின் காரணமாக காலமானார். இவருக்கு 72 வயது ஆகிறது. இன்று மதியம் இறுதிச் சடங்கு நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் இவருடைய மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Readmore: மீண்டும் வேகமெடுத்த பறவைக்காய்ச்சல்!. கொத்துக் கொத்தாக இறந்த 4 லட்சம் கோழிகள்!. உஷார் நிலையில் சுகாதாரத்துறை!

English Summary

RIP|Actor Kali Venkat’s mother passes away!. Celebrities pay their respects!

Kokila

Next Post

அதிர்ச்சி...! திடீரென பரவிய மர்ம நோய்.. 1 லட்சம் கோழிகள் இறப்பு...! யாரும் இறைச்சி சாப்பிட வேண்டும்...!

Thu Feb 6 , 2025
Virus kills over a lakh poultry fowls in three weeks

You May Like