fbpx

உங்கள் ஆதார் எண்ணுக்கு ஆபத்து..!! பாதுகாப்பா இருக்கான்னு செக் பண்ணுங்க..!! பணம் பறிபோகும் அபாயம்..!!

நாடு முழுவதும் உள்ள குடிமக்களுக்கு ஆதார் என்பது முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. அரசு சேவைகள், வங்கி சம்பந்தப்பட்ட வேலைகள், தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் பல போன்றவற்றிற்கும் இந்த ஆதார் எண் பயன்படுகிறது. ஆதார் எண் ஒருவரது வங்கிக் கணக்கு, பான் கார்டு, மின்சார சேவை உள்ளிட்டவற்றுடன் இணைக்கப்பட்டிருப்பதால், இன்று ஆதாரை வைத்து பல்வேறு மோசடிகள் அரங்கேறி வருகின்றன. எனவே, ஒருவர் ஆதார் நம்பரை வழங்கும்போது செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன என்பது பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.

செய்ய வேண்டியவை :

# உங்களது ஆதாரை கேட்கக்கூடிய நிறுவனமோ அல்லது தனி நபரோ அதற்கான சரியான காரணத்தையும், உங்களுடைய சம்மதத்தையும் பெற வேண்டியது அவசியம்.

# ஒருவேளை ஆதார் நம்பரை பகிர்வதில் உங்களுக்கு விருப்பமில்லை என்றால், ஒரு வெர்ச்சுவல் ஐடென்டிஃபையரை (Virtual Identifier – VID) உருவாக்கிக் கொள்ளலாம். ஆதார் எண்ணுக்கு பதிலாக இந்த VID -ஐ நீங்கள் கொடுக்கலாம்.

# UIDAI வெப்சைட் அல்லது m-Aadhaar அப்ளிகேஷனில் கடந்த 6 மாதங்களுக்கான உங்களுடைய ஆதார் ஹிஸ்டிரியை தெரிந்து கொள்ளலாம்.

# ஒவ்வொரு ஆதன்டிகேஷன் செயல்முறையையும் UIDAI உங்களுக்கு இ-மெயில் மூலமாக தெரியப்படுத்தும். ஆகையால், அப்டேட் செய்யப்பட்ட இ-மெயில் ஐடியை உங்களது ஆதாருடன் இணைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

# ஆதார் ஆதன்டிகேஷனை பயன்படுத்தி பல்வேறு விதமான சேவைகளை பெற்றுக் கொள்ளலாம். ஆகவே, உங்களது பயன்பாட்டில் உள்ள மொபைல் நம்பரையும் ஆதாருடன் தவறாமல் இணைத்து வைக்கவும்.

# ஆதார் லாக்கிங் மற்றும் பயோமெட்ரிக் லாக்கிங் போன்ற வசதியையும் UIDAI வழங்குகிறது. ஆதாரை பயன்படுத்தாத சமயத்தில் அதனை பூட்டி வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும்போது உடனடியாக அதனை அன்லாக் செய்து கொள்ளலாம்.

# ஒருவேளை உங்களது ஆதார் தவறான முறையில் பயன்படுத்தப்படுவதாக தோன்றினால், உடனடியாக 1947 என்ற ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். இது 24*7 மணி நேர இலவச அழைப்பு. அல்லது help@uidai.gov.in என்ற இ-மெயில் ஐடியை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

செய்யக்கூடாதவை :

# உங்களுடைய ஆதார் லெட்டர் / PVC கார்டு அல்லது அதன் நகலை தவறுதலாக எங்கும் வைத்து விட வேண்டாம்.

# பொது தளங்களில் உங்களது ஆதார் எண்ணை ஷேர் செய்ய வேண்டாம். குறிப்பாக ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சோஷியல் மீடியாக்களில் பகிரவே கூடாது.

# அதிகாரப்பூர்வமற்ற எந்த ஒரு நிறுவனத்திடமும் உங்களது ஆதார் ஓடிபி பகிர்ந்து கொள்ளக் கூடாது.

# உங்களுடைய m-Aadhaar PIN -ஐ யாரிடமும் சொல்லக்கூடாது.

Chella

Next Post

காதலனுடன் சேர்ந்து போதை காளான் சாப்பிட்ட மாணவி மரணம்..!! ஊட்டியில் அதிர்ச்சி சம்பவம்..!!

Tue Feb 13 , 2024
நீலகிரி மாவட்டத்தில் கல்லூரி மாணவி மது அருந்தியதைத் தொடர்ந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நீலகிரி மாவட்டம் ஊட்டியின் பாம்பே கேசில் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஆகாஷ் (20). இவரும் பிங்கர் போஸ்ட் பகுதியைச் சேர்ந்த ரிதி ஏஞ்சல் (19) என்ற கல்லூரி மாணவியும் காதலித்து வந்துள்ளனர். ரிதி ஏஞ்சல் கோவையில் ஒரு நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில், ஆகாஷ் ஊட்டிக்கு வருமாறு கடந்த சனிக்கிழமை அழைத்துள்ளார். […]

You May Like