fbpx

அதிர்ச்சி…! 20-வது மாடியில் இருந்து விழுந்த OYO நிறுவனர் உயிரிழப்பு…! போலீசார் தீவிர விசாரணை…!

ரித்தேஷ் அகர்வாலின் தந்தை ரமேஷ் அகர்வால் ஹரியானா மாநிலம் குருகிராமில் மாடியில் இருந்து விழுந்து நேற்று உயிரிழந்தார்.

இது தொடர்பாக குருகிராம் துணை காவல் கண்காணிப்பாளர் விஜ் கூறுகையில், நேற்று மதியம் 1 மணியளவில் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. ரமேஷ் அகர்வால், 20-வது மாடியில் இருந்து விழுந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இந்த சம்பவத்தின்போது உயிரிழந்த ரமேஷ் அகர்வாலின் மனைவி, மகன் ரிடேஷ் அகர்வால் மற்றும் ரிடேஷின் மனைவி ஆகியோர் வீட்டில்தான் இருந்துள்ளனர்.

இதுவரை சம்பவ இடத்தில் இருந்து தற்கொலைக்கான தடயங்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை. இது தொடர்பாக உயிரிழந்தவரின் குடும்பத்தினர் தரப்பில் புகார் ஏதும் அளிக்கப்படவில்லை. எனவே, உயிரிழந்தவரின் குடும்பத்தினர் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில், குற்றப்பிரிவு சட்டம் 174இன் கீழ் வழக்குப்பதிவு செய்யபடும்.

ரமேஷ் அகர்வாலின் உடற்கூராய்வுக்கு பிறகு, அவரது உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தார். இதில் குற்றப்பிரிவு 174 என்பது, இயற்கைக்கு எதிரான மரணம் ஆகும். மேலும் OYO நிறுவனரான ரிடேஷ் அகர்வாலுக்கும், ஃபார்மேஷன் வென்சர்ஸ் பிரைவட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் கீதான்ஷா சூட் என்பவருக்கும் கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றுள்ளது. தனது மகனுக்கு திருமணமாகிய 2-வது நாளிலே தந்தை உயிரிழந்ததாக கூறினார்.

Vignesh

Next Post

விஸ்வரூபம் எடுக்கும் H3N2 காய்ச்சல்... எப்போது பாதிப்பு குறையும்..? மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்..

Sat Mar 11 , 2023
H3N2 இன்ஃப்ளுயன்ஸா காய்ச்சல் பாதிப்பு மார்ச் இறுதி முதல் குறையத் தொடங்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு பல புதிய நோய்கள் பரவி வருகின்றன.. அந்த வகையில், சமீபத்தில், H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. நாட்டின் பல்வேறு நகரங்களில் H3N2 வைரஸ், மக்களுக்கு பல்வேறு சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. கடந்த சில மாதங்களாக H3N2 வைரஸ் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் என்ணிக்கை […]

You May Like