fbpx

எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவோருக்கு சாலை வரி, பதிவு கட்டணம் ரத்து.. உ.பி. முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு..

உத்தரபிரதேச மாநிலத்தில் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில், எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவோருக்கு சாலை வரி மற்றும் பதிவுக் கட்டணங்களை ரத்து செய்ய முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அரசு முடிவு செய்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநில முதன்மைச் செயலாளர் எல். வெங்கடேஷ்வர்லு வெளியிட்டுள்ள அறிக்கையில் “ உத்தரப் பிரதேச மின்சார வாகன உற்பத்தி மற்றும் இயக்கக் கொள்கை 2022 இன் படி, அக்டோபர் 14 2022, முதல் அக்டோபர் 13, 2025 வரை உத்தரப் பிரதேசத்தில் விற்கப்படும் மற்றும் பதிவுசெய்யப்பட்ட மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு அளிக்கப்படும். இதன் மூலம் எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவோருக்கு சாலை வரி மற்றும் பதிவுக் கட்டணங்களை ரத்து செய்யப்படு.ம்..

அக்டோபர் 14, 2025 முதல் அக்டோபர் 13, 2027 வரை, மாநிலத்திலேயே தயாரிக்கப்பட்டு விற்கப்படும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு 100 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். இதில் அனைத்து எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள், 3 சக்கர வண்டிகள் மற்றும் 4 சக்கர வாகனங்கள், ஸ்ட்ராங் ஹைப்ரிட் எலக்ட்ரிக் வாகனம் (HEV), பிளக்-இன் ஹைப்ரிட் எலக்ட்ரிக் வாகனம் (PHEV), பேட்டரி எலக்ட்ரிக் வாகனம் (BEV), மற்றும் எரிபொருள் செல் மின்சார வாகனம் (FCEV) ஆகியவை அடங்கும்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவதற்கு மத்திய அரசு வழங்கும் மானியத்துடன் உ.பி அரசின் வரி விலக்கும் உள்ளதால், அம்மாநில மக்களுக்கு கூடுதல் சலுகை கிடைக்கும்.. மத்திய அரசும், மாநில அரசும் வழங்கும் இந்த நிவாரணங்கள் மூலம் இரு சக்கர வாகனங்களின் விலை ரூ.15,000 முதல் ரூ.20,000 வரையிலும், கார்கள் ரூ.1 லட்சம் வரையிலும் விலை குறைக்கப்படும்.

அரசாங்கத்தின் முடிவு டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தில் எலக்ட்ரிக் வாகனங்களின் பதிவு வித்தியாசத்தை முடிவுக்கு கொண்டு வரும்.. இந்த கொள்கையின்படி, மாநிலத்தில் வாங்கப்படும் மின்சார வாகனங்களின் தொழிற்சாலை விலையிலும் 15 சதவீதம் மானியம் வழங்கப்படும். இதில், முதல் 2 லட்சம் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு வாகனத்துக்கு ரூ.5,000ம், முதல் 50,000 எலக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்களுக்கு அதிகபட்சமாக ரூ.12,000ம், முதல் 25,000 4 சக்கர எலக்ட்ரிக் வாகனங்களுக்கு ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

அதே நேரத்தில், மாநிலத்தில் முதலில் வாங்கப்படும் 400 பேருந்துகளுக்கு ஒரு எலக்ட்ரிக் பேருந்துக்கு ரூ.20 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். அரசு ஊழியர்களும் மின்சார வாகனங்களை வாங்க அரசு ஊக்குவிக்கீறது.. இதற்காக, அரசு ஊழியர்கள் முன்பணம் எடுக்கவும் மாநில அரசு அனுமதிக்கிறது..

Maha

Next Post

நாங்களும் நடவடிடுக்கை எடுப்போம்…..! புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் மத்திய அமைச்சர் அதிரடி கருத்து….!

Sun Mar 5 , 2023
புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக தவறான தகவலை பரப்புபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கூறியிருக்கிறார். ஒற்றுமையாக இருக்கின்ற நாட்டில் பிரிவினையை உண்டாக்கும் விதமாக, சிலர் தவறான கருத்துக்களை பரப்பிக் கொண்டு இருப்பதாக அவர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி வழங்கி இருக்கின்றார். மற்ற மாநிலங்களைச் சார்ந்தவர்கள் தமிழகத்திற்கு வருகை தந்து வேலை பார்ப்பதை போல தமிழர்கள் பலரும் […]

You May Like