கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்துள்ள வாகராயம்பாளையம் புதூர் மற்றும் சந்திரபுரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கடந்த 28ஆம் தேதி 18 நாள் ஆன்மீக சுற்றுலாவாக வட மாநிலங்களில் இருக்கின்ற காசி, சாய்பாபா ஆலயங்கள் போன்ற ஆன்மீக தலங்களுக்கு தனியார் சுற்றுலா பேருந்து சென்றனர் அதன்பிறகு காசி உள்ளிட்ட ஆன்மீகத் தலங்களுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு கடந்த 7ம் தேதி இரவு ஒரிசாவில் இருந்து குஜராத்தில் இருக்கின்ற கோவிலுக்கு பயணம் ஆயினர்.
இரவு உணவை முடித்துவிட்டு எல்லோரும் பேருந்தில் வந்து கொண்டிருந்தபோது அதிகாலை 4 மணி அளவில் குஜராத்தில் தங்கும் விடுதி அருகே நின்று கொண்டிருந்தபோது பேருந்தின் மேல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த உடமைகள் குறைந்து காணப்பட்டதால் சந்தேகம் அடைந்த ஓட்டுநர், உதவியாளர் உள்ளிட்டோர் பேருந்தின் மீது ஏறி உடனே பரிசோதனை செய்தனர். அதில் சிலரின் உடமைகள் காணாமல் போய் இருந்தது.
ஆகவே பேருந்தின் பின்புறம் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தது அதிகாலை 2 மணி அளவில் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து பயணித்துக் கொண்டிருந்த போது பேருந்தின் பின்பக்கம் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரில் ஒரு நபர் ஓடும் பேருந்தில் தாவி ஏறுவதும் பேருந்தின் மேல் பகுதியில் வைக்கப்பட்டு இருக்கின்ற உடைமைகளை கீழே தூக்கி வீசுவதும் பதிவாகி இருந்தது அதோடு ஓடும் பேருந்தின் மீது ஏறி அங்கிருந்து இருசக்கர வாகனத்திற்கு மாறும் காட்சிகளும் பதிவாகியிருந்தது.
வழக்கமாக வடமாநிலங்களுக்கு சரக்கு ஏற்றி செல்லும் லாரிகளை குறிவைத்து ஓடும் லாரிகளில் ஏறி கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறும் இந்த நிலையில் தான் சுற்றுலா சென்ற பேருந்தில் ஏறி இவ்வாறு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள், இந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த கொள்ளை சம்பவம் குறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.