fbpx

மனித உணர்வுகளை கொண்ட ரோபோ!… அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!… வியக்க வைக்கும் ஆச்சரியங்கள்!

மனிதனை போன்ற உணர்வுகள் கொண்ட ரோபோவை அமெரிக்காவில் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

நமது உலகில் விஞ்ஞானமானது வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அதில் ஒரு படியாக விஞ்ஞானிகள் ஒரு அற்புதமான கண்டுபிடிப்பை உருவாக்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். அது என்னவென்றால் வியர்வை, நடுக்கம் மற்றும் மூச்சு விடுதல் போன்ற உணர்வுகள் அடங்கிய ஒரு புதுவித ரோபோவை உருவாக்கி உள்ளனர். இந்த ரோபோ ஆன்ட்டி (ANDI) என்று அழைக்கப்படுகிறது. இந்த புதுமையான ரோபோவை அமெரிக்காவின் அரிசோனா மாநில பல்கலைக்கழகத்துடன் இணைந்து தெர்மெட்ரிக்ஸ் என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ஆன்ட்டி ரோபோ உலகின் முதல் வியக்கக்கூடிய ரோபோவாகும்.

அரிசோனா மாநில பல்கலைக்கழக இணைப் பேராசிரியரான கொன்ராட் ரைகாசெவ்ஸ்கி கூறுகையில், ஆன்ட்டி ரோபோவானது மனித உடலில் வெப்பம் மற்றும் தீவிர வெப்பநிலையின் விளைவுகளை ஆய்வு செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 35 தனித்தனியாக கட்டுப்படுத்தக்கூடிய மேற்பரப்புகள் உள்ளது. இந்த மேற்பரப்புகள் மனித உடலில் காணப்படும் சிறிய துளைகள் போல இருக்கும். இதனால் இந்த ரோபோவானது வெவ்வேறு வெப்ப நிலைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் திறன் கொண்டது என்று கூறியுள்ளார்.

Kokila

Next Post

80 செ.மீ. அளவுக்கு கிழக்கே சாய்ந்த பூமி!... ஆபத்து வரப்போகிறது!... எச்சரிக்கை விடுத்த விஞ்ஞானிகள்!

Tue Jun 20 , 2023
மனிதர்களால் அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு வருவதன் காரணமாக பூமியானது 1993 இருந்து 2010 ஆண்டுகளுக்கு இடையில் கிட்டத்தட்ட 80 சென்டி மீட்டர் கிழக்கே சாய்ந்துள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். 1993 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை மட்டும் 2,150 ஜிகா தொன் நிலத்தடி நீர் மனிதர்களால் உறிஞ்சப்பட்டு உள்ளது. இது 6 மில்லிமீட்டக்கும் அதிகமான கடல் மட்ட உயர்வுக்கு சமம் எனத் […]
பூமி

You May Like