கர்நாடகா மாநிலம், மைசூரில் இருந்து பெங்களூர் மற்றும் திருப்பத்தூர், வாணியம்பாடி ஆம்பூர் வழியாக சென்னை வரை செல்லக்கூடிய காவிரி விரைவு ரயில் இந்த வழித்தடத்தில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஆம்பூர் அருகே நேற்று காவிரி விரைவு ரயில் வேகமாக வந்துகொண்டிருந்தது. தண்டவாளத்தில் வைக்கப்பட்ட பாறைகள் மீது விரைவு ரயில் மோதியது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் ஆம்பூர்- பச்சக்குப்பம் ரயில் நிலையம் இடையே தண்டவாளத்தில் கான்கிரீட் கல் வைத்தது, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மங்கள் பிரசாத் என்ற மன நலம் பாதிக்கப்பட்ட நபர் என்பது தெரிய வந்துள்ளது. மங்கள் பிரசாத்துக்கு வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து உறவினர்களிடம் ஒப்படைக்க ரயில்வே போலீசார் முடிவு செய்துள்ளனர்.
நேற்று காலை காவேரி விரைவு ரயில் எஞ்சின் கான்கிரீட் கல் மீது மோதியதை தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.