fbpx

அடேங்கப்பா.! ரூ.83 லட்சம் பிங்க் கலர் டைமண்ட் வாட்ச்.!காதலியின் பிறந்தநாளுக்கு அடிதூள் ‘கிஃப்ட்’ செய்த ரொனால்டோ.!

ரொனால்டோ தனது காதலின் 30வது பிறந்தநாளுக்கு ரூ.83 லட்சம் மதிப்புள்ள, வைரங்கள் பதித்த, இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள கைகடிகாரத்தை பரிசளித்துள்ளார். அதன் புகைப்படத்தை அவரது காதலியான ஜார்ஜியா ரோட்டிக்ஸ் தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

கால்பந்து உலகின் கதாநாயகன் கிறிஸ்டியானோ ரொனால்டோ. உலகெங்கும் அதிக ரசிகர்களைக் கொண்ட இவர், கடந்த சில வருடங்களாக, அர்ஜென்டினாவை சேர்ந்த மாடல் அழகி ஜார்ஜினா ரோட்ரிக்சை காதலித்து வருகிறார். ஜார்ஜினா தற்போது தனது 30 ஆவது பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடியுள்ளார்.

தனது பிறந்த நாளை மாலத்தீவில் கொண்டாட சென்ற அவர், தனது காதலனாக ரொனால்டோ அளித்த கைக்கடிகாரத்தின் புகைப்படத்தை தனது சமூக ஊடகங்களின் வாயிலாக பகிர்ந்துள்ளார். இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள அந்த கைக்கடிகாரம் முழுவதுமாக வைரங்கள் பொறிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க் நகரை சேர்ந்த ஜேக்கப் & கோ நகைக் கடை, அமெரிக்காவில் உள்ள பிரபலங்கள் மற்றும் விளையாட்டு நட்சத்திரங்கள் மத்தியில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. அந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த கைக்கடிகாரம், 1999 ஆம் ஆண்டிலேயே ஜே-இசட்டின் தனிப்பாடலான ‘கேர்ள்ஸ் பெஸ்ட் ஃப்ரெண்ட்’ இல் காட்டப்பட்டது.

“கிரேசியாஸ் மை அமோர்,” – ‘நன்றி என் அன்பே,’ என்று குறிப்பிட்டு, ஜார்ஜினா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைரம் பொறிக்கப்பட்ட கடிகாரத்தின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதன் மதிப்பீடு $100,000 அதாவது இந்திய மதிப்பில் ரூ.83 லட்சம் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ஆடம்பர பரிசை பார்த்த ரசிகர்கள், சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்களை பகிர்ந்து வருகின்றனர்.

Next Post

2023 நெரிசல் மிகுந்த நகரங்கள் பட்டியல்: 'Tech Hub' பெங்களூரு 6-வது இடம்; டாம் டாம் அறிக்கை.!

Sat Feb 3 , 2024
இந்தியாவின் முதன்மையான தொழில் நகரம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் மையமாக விளங்கும் பெங்களூரு உலக அளவில் அதிக நெரிசலான நகரங்களின் பட்டியலில் 6-ஆம் இடம் பெற்றிருப்பதாக நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த லொகேஷன் டெக்னாலஜி ஸ்பெஷலிஸ்ட் ‘டாம் டாம்’ என்பவர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி 2023 ஆம் ஆண்டில் பெங்களூரு நகரம் அதிக நெரிசலான நகரங்களின் பட்டியலில் உலக அளவில் 6-வது இடத்தை பெற்று இருக்கிறது. இந்தப் […]

You May Like