உலக அளவில் கால்பந்து விளையாட்டில் முன்னணி வீரராக வலம் வரும் கிறிஸ்டியானோ ரொனால்டோ சவூதி அரேபியாவின் அல்-நஸர் அணியுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி அவர் ஆண்டுக்கு 177 மில்லியன் யூரோ அதாவது இந்திய மதிப்பில் 1770 கோடி சம்பளத்துக்கு ரொனால்டோவை அல் நஸர் கிளப் ஒப்பந்தம் செய்துள்ளது. ரொனால்டோ புதிய ஜெர்சியுடன் இருக்கும் புகைப்படத்தை அல் நஸர் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அல் நஸர் கிளப் அந்த அணி வெளியிட்டுள்ள பதிவில், வரலாறு உருவாகிறது, இது எங்கள் கிளப்பை இன்னும் பெரிய வெற்றியை அடைய ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், எங்கள் லீக், எங்கள் தேசம் மற்றும் எதிர்கால சந்ததியினர், சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கு சிறந்த பதிப்பாக இருக்க ஊக்குவிக்கும் ஒரு கையொப்பமாகும். உங்களின் புதிய இல்லமான அல் நஸர் எப்.சிக்கு வரவேற்கிறோம் கிறிஸ்டியானோ என தெரிவித்துள்ளது.