திருவேங்கடத்தின் உடல் தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. உயரதிகாரிகள் மருத்துவமனைக்கு வந்து உடலை பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி அவரது வீட்டின் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ரெளடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை காவலில் எடுத்த விசாரிக்க அனுமதி கோரி போலீஸார் தாக்கல் செய்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், 5 நாள்கள் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
இதையடுத்து 11 பேரும் பலத்த பாதுகாப்புடன் பூந்தமல்லி சிறையில் இருந்து பரங்கிமலையில் உள்ள ஆயுதப்படை வளாகத்துக்கு அழைத்து வரப்பட்டனா். அங்கு இணை ஆணையா் விஜயகுமாா் தலைமையில் 10 தனிப்படையினா் 11 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களில் ஒருவர், போலீசாரால் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
தற்போது ரவுடி திருவேங்கடம் என்கவுன்டர் தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது தப்பி ஓடிய ரவுடி திருவேங்கடத்தை பிடிப்பதற்காக தனிப்படை ஆய்வாளர் முகமது புகாரி தலைமையில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. வெஜிடேரியன் வில்லேஜ் என்ற பகுதியில் உள்ள தகர கொட்டகையில் பதுங்கி இருந்த திருவேங்கடத்தை போலீசார் சுற்றிவளைத்த போது போலீசாரை திருவேங்கடம் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் சுட முயன்றுள்ளார். இதனால் போலீசார் அரை என்கவுன்டர் செய்தனர்.
திருவேங்கடத்தின் உடல் தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. உயரதிகாரிகள் மருத்துவமனைக்கு வந்து உடலை பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உயரதிகாரிகள் பார்வையிட்ட பின் உடல் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பப்படவுள்ளது.