பிளாஸ்டிக் கழிவுகள் வைத்து ரூ.1 கோடி வருமானம் ஈட்டும் பெண்ணின் சாதயை பற்றி பார்க்கலாம்.
1998-ம் ஆண்டில், கனிகாவின் பெற்றோர்களான அனிதா மற்றும் ஷலப் அஹுஜா கன்சர்வ் இந்தியா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நிறுவினர். டெல்லியில் இன்னும் பிளாஸ்டிக் அச்சுறுத்தலைச் சமாளிப்பதற்கான போராடிக்கொண்டிருக்கும் நிலையில் மாற்று வழியை நோக்கி பணியாற்றத் தொடங்கினர். இந்த அரசு சாரா நிறுவனத்தை நடத்துவதில் அவரது பெற்றோர் பங்கு ஆழமாக இருந்த நிலையில், கனிகாவை இந்த பணியில் சேர வைப்பதில் அவர்கள் ஆர்வம் காட்டவில்லை.
குறிப்பாக, கனிகா இந்த வேலையில் சேருவதை அவரது தந்தை விரும்பவில்லை. கனிகா கர்நாடகாவில் உள்ள மணிபால் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் கல்லூரியில் தனது படிப்பை தொடங்கினார். பின்னர் டெல்லியில் உள்ள எஸ்ஆர்சிசியில் எம்பிஏ முடித்தார். 2015 வாக்கில் அவர் ஒரு ஒரு சந்தை ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்ற தொடங்கினார். பின்னர் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்தபோதுதான் கனிகா தனக்கான மாற்றத்தை உருவாக்கி வளர்ச்சித் துறையில் ஒரு பகுதியாக இருக்க விரும்பி உள்ளார்.
அப்படித்தான் 2016ல் கனிகா பெற்றோர் நிறுவிய என்ஜிஓவில் சேர்ந்தார். “கன்சர்வ் இந்தியா செய்து கொண்டிருந்த பணி ஒரு ஏற்றுமதி நிறுவனமாக மட்டுமே உணரப்பட்டது, அப்போதுதான் சிறு காலம் ஓய்வு எடுத்த பிறகு ஏற்கனவே செய்து கொண்டிருந்த வேலையை மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பின்னர் 2017 இல் லிஃபாஃபாவின் தொடக்கத்திற்கு வழிவகுத்தது, இது இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அப்சைக்கிள் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வடிவமைத்து சந்தைப்படுத்தும் மாற்றம் பெற்றது.
இன்று, கிட்டத்தட்ட 12 டன் பிளாஸ்டிக் கழிவுகள், பணப்பைகள், பைகள், லேப்டாப் ஸ்லீவ்கள், மேசை விரிப்புகள் போன்றவற்றில் ஆண்டுதோறும் மறுசுழற்சி செய்யப்படுகிறது. கடந்த நிதியாண்டில் மட்டும் இதன் மூலம் ரூ.1 கோடி வருவாயைத் தாண்டிய நிலையில், அந்த சாதனையை முறியடிக்க தயாராக உள்ளது. கன்சர்வ் இந்தியா பல ஆண்டுகளாக வாங்குபவர்களின் வலையமைப்பை உருவாக்கியுள்ளது. எனவே, இந்த தயாரிப்புகளை தயாரிப்பதற்கான பயிற்சி குழுக்கள் மூலம் தொடங்கினர், பின்னர் அதை நாங்கள் லிஃபாஃபா(Lifaffa) என்ற பிராண்ட் பெயரில் சந்தைப்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
தற்போது டயர் கழிவுகள் உள்ளிட்டவற்றை சேர்த்து அதனையும் வீட்டு அலங்கார பொருட்களாக மாற்றி வருவதாகவும், பாரம்பரிய கைவினைப் பொருட்களை செய்யும் ஆப்கானி அகதி பெண்களின் குழுவுடனும் இணைந்துள்ளதாக கனிகா. கூறியுள்ளார். மேலும் இது எல்லா வயதினைரையும் ஈர்க்கும் ஒரு பேஷனாக உருவாக்குவதே எங்கள் இலக்கு என்றார்.