fbpx

PMAY: வீடு கட்ட ரூ.1 லட்சம் மானியம்!… விண்ணப்பிப்பது எப்படி?… முழு விவரம் இதோ!

PMAY: பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டத்தின்கீழ் இந்திய அரசு குடிசைப் பகுதிகளில் வீடுகள் கட்டுவதற்கு ஏதுவாக ஒரு வீட்டிற்கு ரூ.1 லட்சம் மானியமாக வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) என்பது ஏழை மக்களுக்கு வீடுகளை வழங்குவதற்காக இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட நலத் திட்டங்களில் ஒன்றாகும். இந்த திட்டத்தின் கீழ், இந்திய அரசு குடிசைப் பகுதிகளில் வீடுகள் கட்டுவதற்கு ஏதுவாக ஒரு வீட்டிற்கு ரூ.1 லட்சம் மானியமாக வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வீட்டுக் கடனும் வாங்கப்படுகிறது. வறுமைக் கோட்டின் கீழ் இருக்கும் மக்களுக்கு வீடுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முயற்சியாகும். இதில் 6.5% வரை வட்டியுடன் மானியம் பெறலாம், மேலும் நீங்கள் வாங்கும் கடனை 20 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தலாம்.

இந்த திட்டத்திற்கான தகுதி: உங்களுக்கு 18 வயதாகி இருக்க வேண்டும். உங்களுக்கு ஏதேனும் சொந்தமாக வீடு இருக்கக்கூடாது. இதற்கு முன் வீடு வாங்குவதற்கான ஆதாரங்களை ஏதெனும் ப்ரோக்கர்களிடம் வழங்கியிருக்கக் கூடாது. குறிப்பாக, குறைந்த வருமானம் கொண்ட நபராகவும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவாகவும், நடுத்தர வருவாய் கொண்டவராக இருக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள்: ஆதார் அட்டை, வருமான சான்றிதழ்,தொலைபேசி எண், தற்போதைய வசிக்குடியை வீட்டின் ஐடி பாஸ்போட் அளவு கொண்ட புகைப்படம் PM வங்கிக் கணக்கின் விவரம். இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்து வீட்டுக் கடன் மானியத்தைப் பெறுவதற்கு 2024 டிசம்பர் 31ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க PMAY-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://pmaymis.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கவும். உள்ளே சென்றதும், நான்கு விருப்பங்கள் காட்டப்படலாம், உங்களுக்கான விருப்பத்தைத் தேர்வு செய்யவும். (ISSR) என்ற விருப்பத்தைத் தேர்வு செய்த பின்னர், உங்கள் ஆதார் எண் மற்றும் பெயர் பின்வரும் பக்கத்தில் கேட்கப்படும் அதனை உறுதி செய்யவும்.

அப்போது வடிவம் A என தோன்றும். அதனை முழுமையாக நிரப்ப வேண்டும். ஒவ்வொரு ஒவ்வொன்றையும் கவனமாக படித்து நிரப்பவும். அனைத்தையும் முடித்த பிறகு கேப்ட்சாவை கொடுத்துவிட்டால் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது.

Readmore: 2.25 மில்லியனுக்கும் அதிகமான வீடியோக்கள் நீக்கம்!… YouTube அதிரடி!
.

Kokila

Next Post

வாஷிங்மெஷினில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்!… 47 வங்கிக் கணக்குகள் முடக்கம்!… ED சோதனையில் அதிரடி!

Wed Mar 27 , 2024
ED: சட்டவிரோத பணப்பரிமாற்ற விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட சோதனைகளில் வாஷிங் மெஷினில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின்கீழ் கபிரிகார்னியன் ஷிப்பிங் நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் விஜய் குமார் சுக்லா மற்றும் சஞ்சய் கோஸ்வாமி, லட்சுமிடன் மரைடைம், இந்துஸ்தான் இன்டர்நேஷனல், எம். ராஜ்நந்தினி மெட்டல்ஸ் லிமிடெட், ஸ்டாவர்ட் அலாய்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், பாக்யநகர் லிமிடெட், விநாயக் ஸ்டீல்ஸ் லிமிடெட், வசிஷ்டா கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் […]

You May Like