fbpx

ரூ.1 லட்சம் பரிசுத்தொகை… 2024-ம் ஆண்டிற்கான பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்…!

சேலம் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக 2024-ம் ஆண்டிற்கான பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; 2024ம் ஆண்டிற்கான தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்களுக்கு அதாவது தனி நபர்கள், அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன் விருது சேலம் மாவட்டத்தில் 3 பேருக்கு தலா ரூ.1,00,000/-வீதம் பண முடிப்புகள் வழங்கப்பட உள்ளது.

சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை தயாரிப்புகள், பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள், நிலைத்தகு வளர்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீர் மேலாண்மை மற்றும் நீர்நிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்துக்கு உட்படுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கை. காற்று மாசு குறைத்தல், பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கை, சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு, போன்றவற்றில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை சிறப்பாக தங்கள் மாவட்டத்தில் செயல்படுத்திய நிறுவனங்கள். கல்வி நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், தனி நபர்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும்.

பசுமை சாம்பியன் விருது தேர்வு செய்யும் குழு மூலம் தகுதி வாய்ந்த 3 நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கான விண்ணப்பப்படிவத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இன்னும் கூடுதல் தகவல்கள் தேவைப்படுவோர் சேலம் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை அணுகலாம். மேலும், பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க 15.04.2025 தேதி கடைசி நாள் ஆகும். தகுதியுடையவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Rs. 1 lakh prize money… Apply for the Green Champion Award for the year 2024

Vignesh

Next Post

திருமணத் தடையை அகற்றும் திருமணஞ்சேரி கோவில்.. பிரம்மிக்க வைக்கும் வரலாறு..!!

Tue Feb 18 , 2025
Those who are suffering from not getting married, if they go to the marriage temple, the marriage will be canceled immediately.

You May Like