fbpx

தமிழகமே…! ரூ.1,000 கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 4வது தவணை…! எப்பொழுது வழங்கப்படும்…?

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் தகுதியுள்ள பயனாளிகளின் வங்கிக்கணக்குக்கு ரூ.1,000 இன்று அனுப்பி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தில் பதிவு செய்யப்பட்டு விண்ணப்பங்களின் ஏற்கப்பட்ட, அனைவரது வங்கி கணக்குகளுக்கும் இந்த தொகையானது செலுத்தப்பட உள்ளது. கடந்த இரண்டு மாதமாக பதினைந்தாம் தேதிக்கு முன்னதாக வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது. அதனைப் போலவே இன்று மதியத்திற்கு மேல் பணம் வரவழைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திட்டம் தொடர்பாக ஏதாவது சந்தேகங்கள் அல்லது பணம் வரவில்லை என்றால் தமிழக முதல்வரின் உதவி மைய எண் 1100-ஐ தொடர்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம். அல்லது இ-சேவை மையங்களிலும் தங்களின் நிலைகுறித்து தெரிந்து கொள்ளலாம்.

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் அரசிடம் உள்ள பல்வேறு தகவல் தரவுகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டும் மற்றும் அரசு அலுவலர்களால் நேரடி கள ஆய்வுகளின் மூலம் சரிபார்க்கப்பட்டும், திட்ட விதிமுறைகளைப் பூர்த்தி செய்த 1.06 கோடி மகளிர் பயனாளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிர் உரிமைத் தொகைக்கு மீண்டும் மேல் முறையீடு செய்து விண்ணப்பித்த நபர்கள் kmut.tn.gov.in/login.html என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தின் நிலையை தெரிந்து கொள்ளலாம். அதற்கு முதலில் தங்கள் ஆதார் எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். பின்னர் ஆதாரில் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP-யை வைத்து என்ன காரணதிற்காக பணம் வரவில்லை என நீங்களே தெரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

அண்டிப் பழம் கேள்விப்பட்டு இருக்கீங்களா.? ஆரஞ்ச் பழத்தை விட இதில் நன்மைகள் இருக்கா.!

Fri Dec 15 , 2023
முந்திரி நட்ஸ் வகைகளை சார்ந்த ஒன்றாகும். இவற்றின் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. நல்ல கொழுப்பு, புரோட்டின் மற்றும் உடலுக்கு சக்தியை தரக்கூடிய பல மினரல்களை கொண்டிருக்கிறது. முந்திரியை பற்றிய அறிந்த அளவிற்கு பலருக்கும் முந்திரி பழங்களை பற்றி தெரியாது. இவை அண்டி பழம் என்றும் கொல்லம் பழம் என்றும் வேறு வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. துவர்ப்பு சுவையுடைய முந்திரிப் பழங்களை உண்ணலாமா.? மற்றும் அந்தப் பழங்களில் இருக்கும் நன்மை தீமைகள் […]

You May Like