தமிழகத்தில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. அதிலும், குறிப்பாக தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் அரசு நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அதன்படி, இதுவரை நகைக்கடன் தள்ளுபடி, மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 என அடுத்தடுத்து பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.

இந்நிலையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பை தமிழக அரசு விரைவில் அறிவிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்தும் நபர்கள், சொந்த வீடு வைத்திருப்பவர்கள் ஆகியோருக்கு இந்த உரிமைத் தொகை அளிக்கப்படாது என்றும் PHH-AYY, PHH, NPHH ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே நிதி அளிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும், இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.