குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் கொடுக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ள நிலையில் இதற்காக ரேஷன் கார்டுகளில் மாற்றம் எதுவும் செய்ய வேண்டும் என்று அரசு தரப்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமான ஒரு வாக்குறுதி குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் கொடுக்கும் திட்டம் ஆகும். மாதம் 1000 ரூபாய் கொடுக்கப்படும் இந்த திட்டம் இன்னும் தொடங்கப்படவில்லை. தமிழ்நாடு பொருளாதார நிலை காரணமாக திட்டம் தொடங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. திமுகவின் இந்த தேர்தல் வாக்குறுதி பல்வேறு காரணங்களுக்காக இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இதை எதிர்க்கட்சிகளும் விமர்சனம் செய்த நிலையில், கண்டிப்பாக இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி வந்தார். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், பிரசாரத்துக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவதற்கான அறிவிப்பு வரும் பட்ஜெட்டில் இடம்பெறும் என்று கூறினார்.
இந்தநிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3 ஆம் தேதி இந்த திட்டத்தை தொடங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்யும் பணியை நிதித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற ரேஷன் அட்டைகளில் மாற்றம் செய்ய வேண்டியது இல்லை.
அதாவது குடும்ப அட்டையில் குடும்ப தலைவி பெயருக்கு கார்டை மாற்ற வேண்டியது இல்லை. குடும்ப தலைவிக்கு மனைவியாக இருக்கும் நபருக்கே இந்த 1000 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.அதோடு PHH-AYY, PHH, NPHH ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே நிதி அளிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன . NPHH -S, NPHH – NS ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த மாதம் 1000 ரூபாய் தொகை கொடுங்கப்பட மாட்டாது என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மேலும் வீட்டில் அரசு ஊழியர்கள் இருந்தால் அவர்களுக்கு நிதி உதவி அளிக்கப்படாது. வறுமை கோட்டிற்கு மேலே உள்ளவர்களுக்கு இந்த தொகை கொடுக்கப்படாது என்றும் அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.