இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை வெகுவாக அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதால் மக்கள் எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களை வாங்க விரும்புகின்றனர். இந்நிலையில் ஓலா எலக்ட்ரிக் வாகனங்கள் இந்த பண்டிகை காலத்தில் அதன் ஸ்கூட்டர் வாங்க கவர்ச்சிகரமான சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சலுகையின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் ஸ்கூட்டர் வழங்கப்படும். ஸ்கூட்டர் வாங்குபவர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாக கருதப்படுகிறது..
ஓலா மின்சார இரு சக்கர வாகன சந்தையில் கால் பதிக்க விரைவான முதலீடுகளை செய்துள்ளது. ஓலா தனது, ஓலா எஸ்1 மற்றும் ஓலா எஸ்1 ப்ரோ ஆகிய 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை எலக்ட்ரிக் டூ வீலர் பிரிவில் அறிமுகப்படுத்தியுள்ளது, நவராத்திரி மற்றும் தசராவை முன்னிட்டு பண்டிகை சலுகைகளை அறிமுகப்படுத்தியது.
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை அதிகரிக்க ஓலா நிறுவனம் சிறப்பான சலுகைகளை வழங்கியுள்ளது. இதன்படி, ஓலா எஸ்1 ஸ்கூட்டர் வாங்கினால், 10,000 ரூபாய் நேரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதாவது இந்த ஸ்கூட்டரின் விலை .99,999. பண்டிகைக் காலத்தில் இந்த ஸ்கூட்டரை வாங்கினால், 10,000 ரூபாய் குறைவாக வாங்கலாம்.. ஆம்.. 89,999 ரூபாய்க்கு இந்த ஸ்கூட்டரை வாங்கலாம்..
5 வண்ண விருப்பங்களுடன் ஓலா S1 ஸ்கூட்டரைப் பெறுவீர்கள். இந்த ஸ்கூட்டரை மணிக்கு 95 கிமீ வேகத்தில் ஓட்ட முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஸ்கூட்டர் வெறும் 3.8 வினாடிகளில் மணிக்கு 40 கிமீ வேகத்தை எட்டும். இந்த ஸ்கூட்டரை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், 128 கிமீ வரை இயக்கலாம். முழுமையாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு, முழுமையாக சார்ஜ் ஆக 5 மணி நேரம் ஆகும்.