fbpx

‘ஆண்டுக்கு ரூ.10,000’ – திறனாய்வு தேர்வுக்கு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வு தேர்வுக்கு பள்ளி மாணவர்கள் ஜூன் 11 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “2024 – 2025 ஆல் கல்லியாண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு ஜூலை 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் 2023 – 2024 ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயின்று தற்போது 2024 – 2025 ஆம் ஆண்டில் பதிணென்றாம் வகுப்பினை அரசுப் பள்ளிகளில் பயிலும் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். தேர்வில் 1000 மாணாக்கர்கள் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 500 மாணவர்கள் + 500 மாணவியர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு உதவித்தொகையாக ஒரு கல்வியாண்டிற்கு ரூபாய் 10 ஆயிரம் (மாதம் ரூ.1000/ வீதம் ஒரு கல்வியாண்டிற்கு 10 மாதங்களுக்கு மட்டும்) இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும்.

தமிழ்நாடு அரசின் 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளில் கணிதம், அறிவியல் மற்றும் சமூகஅறிவியல் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு இருதாள்களாக நடத்தப்பெறும் முதல் தாளில் கணிதம் தொடர்புடைய வினாக்கள் 60 இடம்பெறும்.இரண்டாம் தாளில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தொடர்புடைய வினாக்கள் 60 இடம்பெறும். முதல் தாள் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரையிலும் இரண்டாம் தாள் பிற்பகல் 02.00 மணி முதல் 04.00 வரையிலும் நடைபெறும். மேலும், www.dge.in.gov.in இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினை ஜுன் 11ஆம் தேதி முதல் ஜூன் 26ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்படும் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேர்வு கட்டணம் ரூ.50-யுடன் சேர்த்து ஜூன் 26ஆம் தேதிக்குள் மாணவர்கள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்கவேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More: காதலில் விழுந்த சுனைனா! காதலரின் கையை பிடித்துக்கொண்டு நியூ போஸ்ட்!

Baskar

Next Post

நோட்...! ஜுன் 9 குரூப் 4 தேர்வு... தேர்வர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறை வெளியீடு...!

Thu Jun 6 , 2024
June 9 Group 4 Exam... Release of rules to be followed by the candidates

You May Like