fbpx

ஒரு மணி நேரத்திற்கு ரூ.12,500..!! இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை..!!

நியூயார்க் நகரம் என்பது எப்போதும் பிசியாக இருக்கக்கூட சிட்டி. ஆனாலும், இங்கு பல பேர் தனிமையில் தங்களது வீடுகளை விட்டு கரியர், பிஸினஸ் என ஓடிக்கொண்டே இருக்கின்றனர். இதில் பல இளம் தலைமுறையினர் சக மனிதர்கள் உடனான இணைப்பை அதிகம் தேடி வருகின்றனர். இதனால் இந்த நகரத்தில் டச் தெரபி, கட்டிப்பிடி வைத்தியம் என்பதும் cuddling சேவைகளுக்கு மிகப்பெரிய அளவிலான டிமாண்ட் உருவாகியுள்ளது.

ஓவிய ஆசிரியராக இருந்த ELLA என்பவர் இளம் தலைமுறையினர் மற்றும் நடுத்தர மக்கள் மத்தியில் உருவான தனிமையை கவனித்து முழுநேர தொடு சிகிச்சை நிபுணராக மாறினார். பொதுவாக கட்டிப்பிடிப்பது என்றாலே தவறான தொழிலாக பலர் பார்க்கின்றனர். ஆனால், இது தனிமையில் இருந்து மீட்டெடுக்கும் ஒரு நிவாரணமாக மாறியுள்ளது.

இந்நிலையில், ELLA என்ற அந்த பெண் தொடு சிகிச்சை பெறுவோருக்கு கைகளை பிடித்துக்கொள்ளவும், தங்கள் மனதில் இருப்பதை பகிரவும், ஆறுதலான அரவணைப்பையும் வழங்குகிறார். அதற்காக ஒரு மணிநேரத்திற்கு சுமார் 150 டாலர் தொகையை கட்டணமாக வசூலித்து வருகிறார். இது இந்திய ரூபாயில் கிட்டத்தட்ட 12,500 ரூபாய் ஆகும். இவருடைய சேவையை பெறுவோர் துவக்கத்தில் 40 முதல் 60 வயதான திருமணமான ஆண்கள் மட்டுமே இருந்த நிலையில், சமீபத்தில் இளம் தலைமுறை பெண்களும் பலர் இங்கு வந்து ஆதரவு தேடுவதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த பெண் 2017ஆம் ஆண்டில் தனது பணியை ராஜினாமா செய்து விட்டு இந்த தொடு சிகிச்சை மற்றும் கட்டிப்பிடி வைத்தியத்தை செய்து வருகிறார். இதற்காக Cuddlist’s certificate-ஐ பெற்றுள்ளதாக கூறுகிறார்.

Chella

Next Post

ஆண்டவரிடம் வசமாக சிக்கிய நிக்சன்..!! போட்டுக்கொடுத்த விசித்ரா..!! இன்னைக்கு சம்பவம் இருக்கு..!!

Sat Nov 18 , 2023
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது கொஞ்சம் சுவாரஷ்யமான சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், இன்றைய நிகழ்வுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், விசித்ரா மேம் என்று கூப்பிட சொன்னதற்கு நிக்சன் என்னை நிக்சன் சார் என்று சொல்லுங்க என்று சொன்னார். அதனால் தான் நான் இனி அப்படி மரியாதையை கொடுத்து கூப்பிட போகிறேன். ஐஷு வெளியே போனதற்கு நான் தான் காரணம் என்று சொன்னார் என […]

You May Like