புதுச்சேரியில் ரூ.13.8 கோடி விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்..
புதுச்சேரி சட்டப்பேரவையில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.. இந்த கூட்டத்தொடரில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.. அதன்படி, புதுச்சேரியில் விவசாயிகள் கடன் ரூ.13.8 கோடி தள்ளுபடி செய்யப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
மேலும் மரபணு குறைபாடு உள்ள குழந்தைகளுக்க்கு மாதம் தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.. மஞ்சள் நிற ரேஷன் அட்டை தாரர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.. புதுச்சேரியில் புதிய சட்டமன்ற கட்ட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.. அதிகாரிகள் பல கேள்விகளை கேட்டு கோப்புகளை தாமதப்படுத்தாமல் இருந்தால் புதுச்சேரி வளர்ச்சியடையும் என்றும் அவர் கூறியுள்ளார்..