fbpx

அரசு அதிரடி…! தமிழில் பெயர் வைக்காத நிறுவனங்களுக்கு இனி ரூ.2,000 அபராதம்…!

தமிழில் பெயர் வைக்காத நிறுவனங்களுக்கு ரூ.2,000 அபராதம் விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தொழில் – வர்த்தக நிறுவனங்களின் பெயர் பலகையில் தமிழை பயன்படுத்துவதை உறுதி செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல சமூக ஆர்வலர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்கான முன்னெடுப்பை தமிழக அரசின் தொழிலாளர் நல ஆணையம் சமீபத்தில் எடுத்தது.

அதன்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கும் வகையில் 1948-ம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் விதிகளிலும், 1959-ம் ஆண்டு தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் விதிகளிலும் திருத்தங்கள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து பெரும்பாலான நிறுவனங்கள் தமிழில் பெயர் வைப்பது கடைபிடித்து வருகின்றன. ஆனாலும் பல நிறுவனங்கள் இதனை கடைபிடிக்காமல் இருந்து வருகிறது. அது போன்ற நிறுவனங்களுக்கு தமிழக அரசு அபராதம் விதிக்கும்.

இந்த நிலையில் தமிழகத்தில் செயல்படும் வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் ரூ.50லிருந்து ரூ.2,000 ஆக உயர்த்தி அபராதம் விதிக்கும் வகையில் விரைவில் அரசாணை வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Vignesh

Next Post

செங்கல்பட்டு மாவட்ட இளைஞர்கள் கவனத்திற்கு...! இன்று காலை 9 முதல் மாலை 3 மணி வரை வேலைவாய்ப்பு முகாம்...!

Sat Sep 2 , 2023
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் வட்டத்தில் உள்ள வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்பம் நிறுவனத்தில் நடைபெற உள்ளது. மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் வழிகாட்டுதல் மையம் இணைந்து நடத்த உள்ளது. இந்த முகாமில் 2,000-ற்கும் மேற்பட்ட துறையின் நிறுவனங்கள் கலந்து கொண்டு தேவைக்கேற்ற நபர்களை தேர்வு […]

You May Like