fbpx

உங்கள் வங்கிக் கணக்கிற்கு ரூ.2,000 வந்துவிட்டது..!! உடனே செக் பண்ணுங்க..!!

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 15-வது தவணையாக ரூ.2,000 வரவு வைக்கப்பட்டு வருகிறது.

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.6,000 நிதியுதவி மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தகுதி வாய்ந்த விவசாயிகள் அனைவருக்குமே 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படுகிறது. இந்த தொகை 3 தவணைகளாக ஏப்ரல் – ஜுலை, ஆகஸ்ட் – நவம்பர் மற்றும் டிசம்பர் – மார்ச் மாதங்களில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இதுவரை இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகளுக்கு ரூ.2.50 லட்சம் கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலம் குந்தியில் உள்ள பிர்சா கல்லூரியில், இன்று ‘பழங்குடியினர் கவுரவ தினம்’ கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பிரதமர் கிசான் திட்டத்தின் 15-வது தவணையை விடுவித்தார். 15-வது தவணையாக, 8 கோடிக்கும் அதிகமான விவசாயிகள், இதில் பயனடைந்துள்ளனர்.

இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து பயனாளிகளுக்கு மாற்றப்பட்ட மொத்த தொகை ரூ.2.80 லட்சம் கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிதி உதவி விவசாயிகளின் விவசாய மற்றும் பிற தற்செயல் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும். மேலும், விவசாயிகள் தங்களது சுய விவரங்களான EKYC யை சரியாக, கட்டாயமாக வழங்கியிருக்க வேண்டும். இதில் தவறுகள் இருந்தால் நிதியுதவி கிடைக்காது.

Chella

Next Post

திருமணத்திற்கு முன் 3 மாதம் லிவிங் ரிலேஷன்ஷிப்..!! ஜெயில்ல இருக்கும்போது கல்யாண ஆசை வந்துருச்சு..!!

Wed Nov 15 , 2023
திருமணம் செய்வதற்கு முன் மணவாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள 3 மாதம் லிவிங் டுகெதரில் இருந்துவிட்டு கல்யாணம் செய்ய வேண்டும் என TTF வாசன் தெரிவித்துள்ளார். 40 நாட்களாக சிறைவாசம் வாழ்ந்த TTF வாசனுக்கு நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்புதான் ஜாமீன் வழங்கியது. பல நாட்களுக்கு பிறகு சோசியல் மீடியா பக்கம் எட்டி பார்த்த வாசன், சர்ச்சையான விஷயம் ஒன்றை கூற அது தற்போது விஸ்வரூபம் எடுத்துவிட்டது. […]

You May Like