2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், அவற்றை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் 19ஆம் தேதி அறிவித்தது.மேலும் பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை எந்த ஒரு வங்கிக் கிளையிலும்மாற்றிக் கொள்ள முடியும் என்றும் இதற்கான கடைசி நாள் செப்டம்பர் 30அம்ம தேதி எனவும் தெரிவித்திருந்தது. அக்டோபர் 1-ம் தேதி முதல் வங்கியில் ரூ.2,000 நோட்டுகளை செலுத்த இயலாது
2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற காலக்கெடு முடிவடையுள்ள நிலையில் அரசு போக்குவரத்துக் கழகம் இது தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுவரை ரூ.2,000 நோட்டுகளை பேருந்துகளில் பெற்று வந்த நிலையில், செப்டம்பர் 28ஆம் தேதி முதல் ரூ.2,000 தாள்களை பெறக் கூடாது என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.