அரசு பேருந்துகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பெறுவதற்கு எந்த தடையும் இல்லை என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற போவதாக இந்திய ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை அறிவித்தது, இருப்பினும் நாணயத் தாள்கள் செப்டம்பர் 30 வரை செல்லாது என்று வங்கி தெரிவித்துள்ளது. 2,000 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை உடனடியாக நிறுத்துமாறு வங்கிகளை ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது, இந்த கரன்சி நோட்டுகளை வைத்திருப்பவர்கள் தங்கள் வங்கிக் கிளைக்கு சென்று நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.
செப்டம்பர் 30 ஆம் தேதி வரை எந்த வங்கிக் கிளையிலும் தங்கள் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யலாம் அல்லது வேறு வகைகளின் ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம் என்று ஆர்பிஐ கூறியுள்ளது. இந்த நிலையில் 2000 ரூபாய் நோட்டை அரசு பேருந்துகளில் வாங்க தடை என்ற செய்தி பரவியது. அரசுப் பேருந்துகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பெறுவதற்கு எந்த தடையும் இல்லை என தமிழ்நாடு போக்குவரத்துத் துறை தகவல் தெரிவித்துள்ளது.