பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் குடும்பங்களுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியுடன் இணைந்து, அரசாங்கம் ரூ.2,000 பணத்தை தகுதியுள்ள விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்துகிறது.. ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும், அதாவது ஏப்ரல்-ஜூலை, ஆகஸ்ட்-நவம்பர் மற்றும் டிசம்பர்-மார்ச் என மூன்று தவணைகளில் தலா ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு ரூ.6,000 நிதிப் பலன் தகுதியான விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

இந்நிலையில் பிஎம் கிசான் சம்மான் திட்டத்தின் 13-வது தவணைக்காக லட்சக்கணக்கான விவசாயிகள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.. 13-வது தவணையான ரூ.2000 எப்போது வழங்கப்படும் என்பது குறித்து அரசாங்கம் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.. எனினும், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது… இத்திட்டத்தின் பயன்பெற தகுதியான விவசாயிகள் PM Kisan Portal-ல் தங்கள் பெயர்களைப் பார்த்து தங்களின் தகுதியை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
13வது தவணையான ரூ.2,000 பெற தகுதியான விவசாயிகள் தங்கள் e-KYC நடைமுறையை முடித்திருக்க வேண்டும்.. ஒருவேளை இந்த நடைமுறையை முடிக்காத விவசாயிகள், பணத்தைப் பெறுவதை உறுதிசெய்ய விரைவில் செய்யுமாறு அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் இத்திட்டத்தில் இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் PM Kisan Portal இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பதிவு செய்யலாம். தேவையான ஆவணங்கள் மற்றும் நடைமுறை உட்பட, எவ்வாறு பதிவு செய்வது என்பது குறித்த விரிவான வழிகாட்டுதலை இந்த போர்டல் வழங்குகிறது.
தேவையான ஆவணங்களின் பட்டியல் மற்றும் e-KYC செயல்முறையின் விளக்கத்துடன், எவ்வாறு பதிவு செய்வது என்பது குறித்த முழுமையான வழிமுறைகளை இந்த போர்டல் வழங்குகிறது. இத்திட்டத்தில் ஏற்கனவே பதிவு செய்துள்ள விவசாயிகள், பயனாளிகளின் பட்டியலில் தங்கள் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளதா என்பதைப் பார்க்க PM Kisan Portal ஐப் பார்வையிடவும். பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா இல்லையா என்பதைப் பார்க்க, போர்ட்டலின் நேரடியான அணுகுமுறையைப் பயன்படுத்தவும். விவசாயிகள் தங்கள் மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம், தொகுதி மற்றும் கிராமத்தை தேர்வு செய்து, இணையதளத்தை அணுகி, பெறுநர் பட்டியலில் அறிக்கையை கோரலாம்.
மேலும் e-KYC மற்றும் பதிவு நடைமுறைகளுடன் விவசாயிகளுக்கு உதவுவதற்காக நாடு முழுவதும் பொது சேவை மையங்களை மத்திய அரசு நிறுவியுள்ளது. பயோமெட்ரிக்ஸ் மற்றும் OTP அடிப்படையிலான e-KYC வசதிகளைப் பயன்படுத்தி e-KYC செயல்முறையை முடிக்க விவசாயிகள் இந்த இடங்களுக்குச் செல்லலாம்.