fbpx

நோட்..! குடிமைப் பணித் தேர்வர்களுக்கு ரூ.3,000 ஊக்கத்தொகை…! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…! முழு விவரம் இதோ…

சென்னையில் உள்ள பசுமை வழிச்சாலையில் இயங்கிவரும் அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம், கடந்த 56 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இந்த மையம், தமிழக இளைஞர்களுக்குக் குறிப்பாகக் கிராமப்புறப் பகுதிகளில் உள்ள ஏழை மாணவர்களுக்குப் பயிற்சியளித்து வருகிறது. ஆண்டுதோறும் குடிமைப்பணித் தேர்வுகளில் வெற்றி பெற்று இந்திய நிர்வாகத்தில் உயர்நிலையினை அடையும் வகையில், இங்குப் பயிலும், மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கப்படுகிறது.

இப்பயிற்சி மையத்தில் பசுமைச் சூழலுடன் வகுப்பறைகள், தங்கும் இடவசதி, தரமான உணவு வழங்கும் விடுதி, சிறந்த நூலகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அமைந்துள்ளன. மாணவர்களுக்கு இங்குக் கட்டணமின்றி உணவு அருந்தவும், அருமையான இயற்கைச் சூழலில் தங்கிப்படிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிறந்த பயிற்றுநர்களைக்கொண்டு பயிற்சி அளிப்பதுடன், மாணவர்கள் தங்களை முதன்மைத் தேர்விற்குத் தயார்ப்படுத்திக்கொள்ளும் வகையில் மாதிரித்தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. இதுதவிர, முதன்மைத்தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு மாதம் ரூபாய் 3,000 ஊக்கத் தொகையும் அளிக்கப்படுகிறது

தமிழக மாணவர்கள் எங்குப் பயிற்சி பெற்று முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலும், இந்தப் பயிற்சி மையத்தில் பயிற்சிபெற அனுமதிக்கப்படுவார்கள். இந்த மையத்தில், இந்த ஆண்டு, 225 பேர் தங்கிப் பயிலச் சிறப்பான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் சேர விரும்பும் தேர்வர்கள் இன்று மாலை 06.00 மணி வரையில் www.civilservicecoaching.com என்ற இணையத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இணையத்தில் பதிவு மேற்கொள்ளும் மாணவர்கள், விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளபடி, வருமானச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தமைக்கான இணைய ரசீதை விண்ணப்பத்துடன் இணைத்தளிக்க வேண்டும். வருமானம் தொடர்பாக உரிய அலுவலர்கள் அளித்த வருமானச் சான்றிதழினைக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் சேரும் போது ஒப்படைக்கவேண்டும். பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலினத் தேர்வர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

Vignesh

Next Post

இனி அரிசி, கோதுமை விற்பனை கிடையாது?… மத்திய அரசின் திட்டம் என்ன?

Sat Jun 17 , 2023
இந்திய உணவு கழகத்தின் கையிருப்பிலுள்ள அரசி மற்றும் கோதுமையை மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படாது என்று மத்திய அரசு முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு மாநில அரசுகள் தங்களது தேர்தல் வாக்குறுதிகளில் இலவச அரிசி வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசு இந்திய உணவு கழகத்தின் கையிருப்பிலுள்ள அரசி மற்றும் கோதுமையை மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படாது என்று முடிவுசெய்துள்ளது. ஏனெனில் இடைத்தரகர்களால் ஏற்படும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவே இம்முடிவு எடுக்கப்பட்டு […]
அரிசி மீதான ஜிஎஸ்டி வரி..! ஓட்டல்களில் இட்லி, தோசை போன்ற உணவு வகைகளின் விலை மேலும் உயருகிறது..!

You May Like