fbpx

இவர்களுக்கு ரூ.3,000 பொங்கல் கருணைக் கொடை, தமிழக அரசு அதிரடி..!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் பணிபுரியும் திருக்கோயில் பணியாளர்களுக்கு கருணைக் கொடையாக ரூ.3,000 வழங்கப்படும் என்று தம இழக்க அரசு அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசுப் பணியாளர்களுக்கு சிறப்பு மிகை ஊதியம் வழங்க, கடந்த 5ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. அதனடிப்படையில், முழு நேரம், பகுதி நேரம், தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளர்கள் உட்பட அனைத்து கோயில் பணியாளர்களுக்கும், பொங்கல் கருணைக் கொடையாக 3,000 ரூபாய் வழங்கப்பட இருக்கிறது.

இந்த 3,000 ரூபாய் பெற கோயில் பணியாளர்கள், 2022 – 23ஆம் ஆண்டில் 240 நாட்கள் மற்றும் அதற்கு மேலாக பணிபுரிந்திருக்க வேண்டும். ஆனால், 240 நாட்களுக்கு குறைவாக பணிபுரிந்தோருக்கு, அவர்கள் பணிபுரிந்த நாட்களுக்கு மட்டும் விகிதாச்சார அடிப்படையில், இத்தொகை வழங்கப்படும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kathir

Next Post

முதியவர் பலி எதிரொலி!… சாலையில் மாடுகள் சுற்றித்திரிந்தால் ரூ.5000 அபராதம்!… ஆணையர் எச்சரிக்கை!

Thu Jan 11 , 2024
சென்னை நங்கநல்லூரியில் சாலையில் சென்றுக்கொண்டிருந்தபோது மாடுமுட்டியதில் முதியவர் உயிரிழந்ததையடுத்து, சாலையில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை நங்கநல்லூர் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா காலனி பகுதியை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் சந்திரசேகர். இவர், சாலையில் நடந்து சென்றுக்கொண்டிருந்தபோது, அங்கு சண்டையிட்டுக்கொண்டிருந்த எருமை மாடுகள் திடீரென சந்திரசேகரை முட்டி தள்ளின. இதில் படுகாயங்களுடன் மயங்கிவிழுந்து சம்பவ இடத்திலேயே […]

You May Like