fbpx

ரூ.3,160 குறைந்த தங்கம் விலை..!! இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.51,320-க்கு விற்பனையாகிறது. 4 நாள்களில் ரூ.3,160 குறைந்துள்ளது.

சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், தங்கம், வெள்ளிக்கான சுங்க வரி குறைக்கப்பட்டதால், அதன் விலை தொடா்ந்து குறைந்து வருகிறது. சென்னையில் ஜூலை 17ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 55,360 வரை உயா்ந்து புதிய உச்சத்தை தொட்டது.

தொடா்ந்து படிப்படியாக விலை குறைந்து வியாழக்கிழமை சவரன் ரூ.51,440-க்கு விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை மேலும் விலை குறைந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ. 15 குறைந்து ரூ.6,415-க்கும், சவரன் ரூ. 120 குறைந்து ரூ. 51,320-க்கும் விற்பனையாகிறது.

பட்ஜெட் தாக்கல் எதிரொலியாக கடந்த 4 நாள்களில் தங்கம் விலை ரூ.3,160 குறைந்துள்ளது. வெள்ளியின் விலையில் மாற்றமின்றி வெள்ளி கிராம் ரூ. 89-க்கும், ஒரு கிலோ ரூ.89,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read More : ”ஜம்மு காஷ்மீருக்கு யாரும் செல்ல வேண்டாம்”..!! அமெரிக்கா விடுத்த பரபரப்பு எச்சரிக்கை..!!

English Summary

Due to reduction in customs duty on gold and silver in the central budget, its prices are continuously decreasing.

Chella

Next Post

திருப்பதியில் முடி காணிக்கை செய்பவர்களின் கவனத்திற்கு..!! தேவஸ்தானம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!

Fri Jul 26 , 2024
It has been reported that the Devasthanam administration has issued an order to provide hot water for bathing to Tirupati Seven Hair Donors.

You May Like