fbpx

சூப்பர் தகவல்…! மீனவர்களுக்கு ரூ.5 லட்சம் விபத்து காப்பீடு…! 3 சதவீதம் வரை வட்டி மானியம்…!

மத்திய அரசு, 2018-19 ஆம் ஆண்டில், மீனவர்கள் மற்றும் மீன் வளர்ப்போரின் நடைமுறை மூலதனத் தேவைகளை பூர்த்தி செய்ய வேளாண் கடன் அட்டை வசதியை விரிவுபடுத்தியது. தற்போதைய நிலவரப்படி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 4,26,666 வேளாண் கடன் அட்டைகள் மீனவர்கள் மற்றும் மீன்வளர்ப்போருக்கு வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

மேலும், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் மீன்வளத்துறை, 2018-19 ம் நிதியாண்டு முதல், மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி என்ற திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், பல்வேறு மீன்வள உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சலுகை அடிப்படையில் ஆண்டு 3 சதவீதம் வரை வட்டி மானியத்துடன் வழங்கப்படுகிறது.

மீனவர்கள் மற்றும் மீன்வளர்ப்போருக்கு விபத்து காப்பீட்டுத் தொகை வழங்கி, காப்பீட்டுத் தொகை முழுவதையும் பயனாளியிடமிருந்து எந்தப் பங்களிப்பும் இன்றி, மத்திய மற்றும் மாநில அரசுகள் ஏற்கின்றன. குழு விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் காப்பீட்டுத் தொகையில் இறப்பு அல்லது நிரந்தர முழு ஊனத்திற்கு எதிராக ரூ.5,00,000, நிரந்தர பகுதி ஊனம் ஏற்பட்டால் ரூ.2,50,000 மற்றும் விபத்து ஏற்பட்டால் மருத்துவமனையில் சேர்க்கப்படும் செலவுகள் ரூ.25,000 வழங்கப்படுகிறது. கடந்த மூன்று நிதியாண்டுகள் (2021-22 முதல் 2023-24 வரை) மற்றும் நடப்பு நிதியாண்டில் (2024-25), 131.30 இலட்சம் மீனவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

28.06.2024 வரை தமிழ்நாட்டில் 2,43,768 மீனவர்களுக்கு வேளாண் கடன் அட்டைகள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் குழு விபத்து காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 21,99,335 மீனவர்கள் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டு, ரூ.10,23,31,305 கோடி பிரீமியம் தொகை செலுத்தப்பட்டுள்ளது.

English Summary

Rs.5 lakh accident insurance for fishermen

Vignesh

Next Post

அம்மாவை பார்க்க முடியல.. மனம் உடைந்து விட்டேன்..!! - ஷேக் ஹசினா மகள் உருக்கம்

Thu Aug 8 , 2024
"Heartbroken that I can't see, hug her": Sheikh Hasina's daughter amid Bangladesh crisis

You May Like