fbpx

பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம்..!! என்னென்ன தகுதி வேண்டும்..? எப்போது கிடைக்கும்..? வெளியான முக்கிய அறிவிப்பு..!!

புதுச்சேரியில் பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் 2023-24ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக பல முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டிருந்தார். அதில், தற்போது பெண் குழந்தைகள் பிறந்தால் ரூ.50,000 டெபாசிட் செய்யும் திட்டத்துக்கான அரசாணை வெளியிடப்பட்டது. முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் என்ற பெயரில் இது அறிமுகமாகிறது.

இந்த திட்டத்தின் முக்கிய விதியாக, குழந்தையின் பெற்றோர் தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் புதுச்சேரியில் தங்கியிருந்திருக்க வேண்டும். 17.3.2023-க்கு பிறகு பிறந்த குழந்தைகள் இந்த திட்டத்தின் மூலம் பயனடையலாம். குழந்தையின் பெயரில் ரூ.50,000 வங்கி அல்லது அஞ்சல் நிலையத்தில் டெபாசிட் செய்யப்படும். 21 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த பணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த திட்டத்தை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக 22 குழந்தைகளுக்கு தலா ரூ.50,000 வழங்கினார்.

Chella

Next Post

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளீர்களா..? உங்களுக்கு எப்போது கிடைக்கும்..? வெளியான லேட்டஸ்ட் தகவல்..!!

Sat Sep 2 , 2023
தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு எப்போது கார்டு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் 2.24 கோடி குடும்ப அட்டைகள் செயல்பாட்டில் உள்ளன. கடந்த மே 2021 முதல் இப்போது வரை 15 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. ஆனால், மாதம்தோறும் சராசரியாக 40,000 பேர் புதிய ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால், தற்போது புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், […]

You May Like