Pakistan: பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முயற்சியாக, புதிதாக வடிவமைக்கப்பட்ட ரூ.10, 50, 100, 500, 1,000 மற்றும் ரூ.5,000 ரூபாய் நோட்டுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என்று பாகிஸ்தான் மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் தனது பொருளாதாரத்தை வலுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இதற்காக உலக வங்கியில் கடன் வாங்கி உள்நாட்டில் ஒவ்வொரு சிறு அடியையும் எடுத்து வைப்பதில் தயக்கம் காட்டவில்லை.
தற்போது பாகிஸ்தான் மத்திய வங்கி ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதிய பாலிமர் பிளாஸ்டிக் கரன்சி ரூபாய் நோட்டு இந்த ஆண்டு இறுதியில் பயன்பாட்டுக்கு வரும். சிறந்த பாதுகாப்பு மற்றும் ஹாலோகிராம் அம்சங்களுக்காக தற்போதுள்ள அனைத்து ரூபாய் நோட்டுகளையும் மத்திய வங்கி மறுவடிவமைப்பு செய்யும்.
பாகிஸ்தானின் ஸ்டேட் பாங்க் கவர்னர் ஜமில் அகமது இஸ்லாமாபாத்தில் உள்ள வங்கி மற்றும் நிதி தொடர்பான செனட் குழுவிடம், இந்த ஆண்டு டிசம்பருக்குள் தற்போதுள்ள அனைத்து காகித கரன்சி நோட்டுகளும் புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் மறுவடிவமைப்பு செய்யப்படும் என்று தெரிவித்தார். புதிதாக வடிவமைக்கப்பட்ட ரூ.10, 50, 100, 500, 1,000 மற்றும் ரூ.5,000 ரூபாய் நோட்டுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என்று அகமது கூறினார்.
Readmore: இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்!. இந்த ஆண்டு இறுதிக்குள் இயக்கப்படும்!. அம்சங்கள் இதோ!