முனைவர் பட்டம், முதுநிலைப் பட்டம் பெற்றவர்களுக்கு 20,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் அரசு கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளராக நியமிக்கப்பட்டு வந்தனர். தற்போது அவர்களுக்கான ஊதியம் கூடுதலாக 5000 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
அரசு கலை அறிவியல் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு கூடுதலாக ரூ .5,000 ஊதியம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடந்த துணைவேந்தர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பல்கலைக்கழக விதிகளை மாற்றி ஒரே மாதிரியான ஊதியம், தகுதி ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், கவுரவ விரிவுரையாளர்களின் மாத ஊதியம் ரூ.20,000 லிருந்து ரூ .25,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.