fbpx

17 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண் & பெண்களுக்கு ரூ.5000 வழங்கப்படும்…! போட்டியில் பங்கு பெற அழைப்பு…!

தருமபுரி மாவட்டத்தில் இளைஞர்களுக்கான ஓட்டப்பந்தய போட்டி போட்டி விளையாட்டு துறை சார்பில் நடத்தப்பட உள்ளது.

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் பொதுமக்களிடையே உடற்தகுதி கலாச்சாரத்தை புகுத்தும் வண்ணம் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்பந்தய போட்டி ஆண்டு தோறும் அனைத்து மாவட்டங்களில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து 05.01.2025 அன்று தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி மாவட்டப் பிரிவு மூலமாக அதியமான் கோட்டை செந்தில் பப்ளிக் பள்ளியிலிருந்து தொடங்கப்பட உள்ளது.

அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்பந்தய போட்டி ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருக்கும் கீழ்க்கண்ட இரண்டு பிரிவுகளில் தனித்தனியாக நடத்தப்படவுள்ளது. 17 முதல் 25 வயதிற்குட்டபவர்கள் பிரிவில் 01.01.2000 முதல் 31.12.2007 அன்றுக்குள் பிறந்தவர்களும், 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் பிரிவில் 31.12.1999க்குள் பிறந்தவர்களும் கலந்து கொள்ளலாம்.

17 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்கள் மற்றும் 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு செந்தில் பப்ளிக் பள்ளி, அதியமான் கோட்டையிலிருந்து தொடங்கி தேசிய நெடுஞ்சாலை வழியாக தடங்கம் மேம்பாலம் சென்று திரும்பி மீண்டும் தோக்கம்பட்டி வழியாக செந்தில் பப்ளிக் பள்ளி வந்தடையுமாறும், 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட பெண்கள் மற்றும் 25 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு செந்தில் பப்ளிக் பள்ளி, அதியமான் கோட்டையிலிருந்து தோக்கம்பட்டி வழியாக தடங்கம் மேம்பாலம் வரை சென்று திரும்பி மீண்டும் அதே வழியாக செந்தில் பப்ளிக் பள்ளி வந்தடையுமாறும் நெடுந்தூர ஓட்டப்பந்தய போட்டி நடைபெறவுள்ளது.

ஒவ்வொரு பிரிவிலும் வெற்றிபெறும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு முதல் பரிசாக ரூ.5000/-, இரண்டாம் பரிசாக ரூ.3000/-, மூன்றாம் பரிசாக ரூ.2000/-, நான்கு முதல் 10 இடங்களைப் பெறுபவர்களுக்கு தலா ரூ.1000/-. மற்றும் தகுதிச் சான்றிதழ்களும் வழங்கப்படும். போட்டியில் எதிர்பாராமல் நேரும் விபத்துகளுக்கும், தனிப்பட்ட இழப்புகளுக்கும் பங்குபெறும் பயனாளிகளே பொறுப்பு ஏற்க வேண்டும். எனவே தருமபுரி மாவட்டத்திலுள்ள 17 வயதிற்கு மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், விளையாட்டு வீரர் / வீராங்கனைகள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டியில் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Rs.5000 will be given to men & women between the ages of 17 and 25.

Vignesh

Next Post

புற்றுநோயை தடுக்கும்.. கொழுப்பை குறைக்கும்.. ஊறவைத்த வேர்க்கடலையில் இவ்வளவு நன்மைகளா..?

Sun Dec 29 , 2024
Prevents cancer.. Reduces cholesterol.. So many benefits of soaked peanuts..?

You May Like