fbpx

ரூ.8,000 ஆய்வு கட்டணம்… நாளை நள்ளிரவு 11.59 வரை‌ விண்ணப்பிக்க வாய்ப்பு…! மிஸ் பண்ணிடாதீங்க

2024-2025 ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள் / தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக நாளை நள்ளிரவு 11.59 வரை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

2024-2025 ஆம் கல்வியாண்டிற்கு அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி ஒரு இணையதள விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது. விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற்பிரிவுகள் மற்றும் கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரே விண்ணப்பத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் மற்றும் ஆய்வுக்கட்டணம் RTGS/NEFT மூலம் செலுத்த வேண்டும். அனைத்து தொழிற் பிரிவுகளுக்கும் சேர்த்து விண்ணப்ப கட்டணம் ரூ.5000 மற்றும் ஆய்வு கட்டணம் ரூ.8000 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க நாளை கடைசி நாள். இதற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மேலும் அங்கீகாரம் குறித்த தகவல் மற்றும் அறிவுரைகள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Vignesh

Next Post

தமிழகத்தை உலுக்கும் கோர சம்பவம்!… 6 பேர் பலி!… குற்றாலம் சென்றுவிட்டு திரும்பியபோது சோகம்!

Sun Jan 28 , 2024
தென்காசி மாவட்டத்தில் காரும் – லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகேயுள்ள புன்னையாபுரத்தில் இந்த விபத்தானது நடைபெற்றுள்ளது. அங்குள்ள கொல்லம் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த மீட்புத்துறையினர் விபத்தில் உயிரிழந்தவர்கள் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு […]

You May Like