பள்ளி மாணவர்கள் வீட்டில் இருந்த படியே பாடம் கற்பதற்கு வசதியாக, கடந்த அதிமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் கல்வி தொலைக்காட்சி தொடங்கப்பட்டது.. கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட போது இந்த கல்வி தொலைக்காட்சி அரசு பள்ளி மாணவர்களுக்கு பெரிதும் உதவியது.. இதையடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சி அமைந்த போதிலும், கல்வி தொலைக்காட்சியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.. அரசு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளும் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது..

இதனிடையே கல்வி தொலைக்காட்சியின் முதன்மை செயல் அலுவலராக மணிகண்டன் பூபதி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.. பள்ளிக்கல்வித்துறை நேற்று இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது.. சில தனியார் தனியார் தொலைக்காட்சிகளிலும், யூ டியூப் சேனல்களிலும் இவர் பணியாற்றி உள்ளார்.. குறிப்பாக வலதுசாரி ஆதரவாளர் ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா யூ டியூப் சேனலை இவர் தொடங்கியதாக கூறப்படுகிறது. மேலும் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர் என்றும் தெரிகிறது.. எனினும் பள்ளிக்கல்வித்துறையை சாராத ஒருவர் முதன்மை நிர்வாக இயக்குநராக நியமனம் செய்யப்படுவது இதுவே முதன்முறையாகும்…

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறையின் இந்த நடவடிக்கைக்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. குறிப்பாக கல்வித்துறையில் ஆர்.எஸ்.எஸ் ஊடுருவிட்டதாகவும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.. ஒருபக்கம் மத்திய அரசின் புதிய தேசிய கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் திமுக அரசு, மறுபக்கம் ஆர்.எஸ்.எஸ். குண்டர்களை அரசு பணியில் நியமிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது..
காவி கும்பலுக்கு அரசு பதவி கொடுத்து அழகு பார்க்கும் அன்பில் மகேஷ் அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.. தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊடுருவ அன்பில் மகேஷ் உதவுவதாகவும், இது திராவிட மாடலுக்கு பெரும் அவமானம் என்றும் அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.. இதனால் #Resign_AnbilMahesh என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டாகி வருகிறது.. திமுகவினரே இந்த ஹேஷ்டாகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் என்பதே இதில் கூடுதல் சிறப்பு..