அக்டோபர் 2-ம் தேதி பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ். அனுமதி கேட்டு வந்த நிலையில் தற்போது பேரணி நடத்துவதற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
காந்தி ஜெயந்தி நாளில் தமிழகத்தில் பேரணி செல்வதற்கு ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டு அனுமதி கேட்டிருந்த நிலையில் பேரணி நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இதை விசாரித்த நீதிபதிகள் காவல்துறை அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்ற உத்தரவையும் மீறி அனுமதி மறுத்தது. இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இது குறித்த வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தபோது நவம்பர் 6ம் தேதி ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று டி.ஜி்.பிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து மாவட்ட காவல்துறைக்கு டி.ஜி.பி. உத்தரவிட்டதுமட்டும் இன்றி அறிவுரை வழங்கி உள்ளது. சட்டம் – ஓழுங்கு பிரச்சனைகளை கருத்தில் கொண்டு அனுமதி அளிக்குமாறு அந்தந்த மாவட்ட காவல்துறைக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுறுத்தி உள்ளார்.
அக்டோபர் 2ம் தேதி பேரணி நடைபெற இருந்தது. இந்த ஊர்வலத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கினால்சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படு்ம என மற்ற மாநிலத்தில் நடந்த அசம்பாவிதங்களை சுட்டிக்காட்டி மற்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது.