மத்தியப் பிரதேசத மாநிலத்தில் வட்டார போக்குவரத்து அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் சந்தோஷ் பால். இவரது மனைவி ரேகா. இவர் அதே அலுவலகத்தில் கிளர்க்காக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளதாக தொடர்ச்சியாக புகார்கள் குவிந்தன.
இந்த நிலையில், பொருளாதார குற்றப்பிரிவினர் நேற்று சந்தோஷ் பால் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். ஒரு அரசு அதிகாரியின் வீட்டினுள் இருந்த ஆடம்பரத்தைக் கண்டு சோதனை போட சென்ற அதிகாரிகளே திகைத்துப் போனதாக கூறப்படுகிறது. 10,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள அவரது வீட்டில் ஒரு நீச்சல் குளம், மினி பார் மற்றும் மினி தியேட்டர் ஒன்றும் இருந்து உள்ளது. வீடு அரண்மனை போல் பெரியதாக உள்ளது.
சந்தோஷ் பால் வீட்டில் நடத்தப்பட்ட இந்த ரெய்டு தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சோதனையின் போது, அவரது வீட்டில் இருந்து ரூ. 16 லட்சம் ரொக்கம், விலை உயர்ந்த நகைகள், சொகுசு கார்கள் கைப்பற்றியுள்ளனர். இந்த வீட்டை தவிர அவருக்கு மேலும் நான்கு வீடுகள் மற்றும் ஒரு பண்ணை வீடு இருப்பதும் இந்த சோதனையில் தெரிய வந்தது. அது தொடர்பான ஆவணங்களையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
முதற்கட்ட சோதனையில் மொத்தம் ரூ.300 கோடிக்கும் அதிகமான சொத்துகள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தத் தம்பயினர்தி தங்கள் வருமானத்தைக் காட்டிலும் 650 சதவீதம் அதிகமாகச் சொத்துகளைச் சேர்த்தும் தெரிய வந்துள்ளது.