fbpx

ரூல்ஸ் ரூல்ஸ் தான் சிறுவனின் லின்கிடுஇன் கணக்கு முடக்கம்..!

எலான் மஸ்க் தலைமை வகிக்கும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் ஒரு 14 வயது சிறுவனுக்கு வேலை கொடுத்த சம்பவம் உலக நாட்டு மக்களை வியக்க வைத்தது என்றால் மிகையில்லை. Kairan Quazi கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிப்பை 14 வயதிலேயே முடித்துவிட்டு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் கடினமான இன்டர்வியூவ்-வில் சேர்ச்சி பெற்றதை தொடர்ந்து விரைவில் சேர உள்ளதாக லின்கிடுஇன் தளத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த பதவி உலகளவில் பிரபலமான நிலையில் Kairan Quazi-க்கு முக்கியமான பிரச்சனை தற்போது வெடித்துள்ளது. லின்கிடுஇன் தளத்தின் விதிமுறைகள் படி இத்தளத்தில் சேர விரும்புவோருக்கு குறைந்தது 16 வயது கொண்டு இருக்க வேண்டும்.

ஆனால் Kairan Quazi-க்கு வெறும் 14 வயது மட்டுமே ஆன நிலையில் லின்கிடுஇன் இந்த வைரலான பதிவை தொடர்ந்து விதிமுறைகளை மீறி கணக்கு இயங்கி வந்ததை கண்டுப்பிடித்து, இவருடைய கணக்கை முடக்கியுள்ளது. இந்த சம்பவத்தை பற்றி Kairan Quazi தனது இன்ஸ்டாகிராம்-ல் பதிவிட்டு உள்ளார். Linkedin எனக்கு 16 வயது ஆகாததால் எனது கணக்கை நீக்குகிறார்கள் என்ற அறிவிப்பை அனுப்பியுள்ளது. இது என் வாழ்வில் தொடர்ந்து எதிர்கொள்ளும் நியாயமற்ற, பழமையான முட்டாள்தனமான பிரச்சனை. உலகில் மிகவும் முக்கியமான பொறியியல் வேலைகளில் ஒன்றைப் பெறுவதற்கு நான் போதுமான தகுதி பெற்றவனாக இருக்க முடியும்போது ஒரு ப்ரொபஷ்னல் சோஷியல் மீடியாவை பயன்படுத்துவதற்கு போதுமான தகுதி இல்லையா? மேலும் LinkedIn சில தொழில்நுட்ப நிறுவனங்கள் எவ்வளவு பின்னடைவான கொள்கைகளை கொண்டிருக்கின்றன என்பதை காட்டுகிறது. மக்களே இந்த பதிவின் ஸ்கிரீன்ஷாட்டை எனக்காக அவர்களின் LinkedIn இல் பகிர்ந்து கொள்ளவும், Instagram இல் என்னுடன் இணையுமாறு மக்களைக் கேட்க முடியுமா? என பதிவிட்டு உள்ளார்.

14 வயதான Kairan Quazi அடுத்த சில மாதத்தில் அமெரிக்காவின் Santa Clara University’s School of Engineering கல்லூரியில் இருந்து பட்டம் பெற உள்ள நிலையில் எலான் மஸ்க் கட்டுப்பாட்டில் இயங்கும் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் கடுமையான டெக்னிக்கல் இன்டர்வியூவ்-ஐ க்ளியர் செய்து விரைவில் ஸ்டார்லிங்க் நிறுவன பணியில் சேர உள்ளார்.

Maha

Next Post

ஹிண்டன்பர்க் பிரச்சனை எல்லாம் முடிஞ்சுபோச்சா அதானி..?!

Sat Jun 17 , 2023
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக இருக்கும் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு ஹிண்டன்பர்க் ரிசர்ச் அமைப்பின் அறிக்கை வாயிலாக பெரிய அளவிலான இழப்பை சந்தித்து அதில் இருந்து இன்றளவும் மீள முடியாமல் மாடிக்கொண்டு இருக்கிறது.   இந்த நிலையிலும் அதானி குழுமத்தில் புதிய கடன், புதிய முதலீடுகளை ஈர்க்க முடியாமல் இருந்தாலும் தொடர்ந்து அனைத்து பிரிவுகளின் வர்த்தகமும் சிறப்பாக நடந்து வருகிறது. இதேவேளையில் நிறுவனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கை காரணமாக சில […]

You May Like