fbpx

உக்ரைனில் போரை தீவிரப்படுத்தி உள்ள ரஷ்யா.. அதிகாரிகளுக்கு புடின் போட்ட அதிரடி உத்தரவு…

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த ஓராண்டுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது.. இதுவரை இருநாடுகளிடையே நடந்த பேச்சுவார்த்தையில் போரை நிறுத்துவதற்கான எந்த சுமூக உடன்பாடும் எட்டப்படவில்லை.. இதன் காரணமாக, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் ஏற்பட்ட மிக மோசமான அகதிகள் நெருக்கடியாக இந்த போர் பார்க்கப்படுகிறது. இந்த போரில் இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், 13 மில்லியனுக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். எனினும் போர் தொடர்ந்து வருகிறது..

இந்நிலையில் ரஷ்யா மேலும் போரை தீவிரப்படுத்தி உள்ளது.. கிழக்கு உக்ரைனில் உள்ள பாக்முட் நகரில் நேற்று முதல் ரஷ்ய படைகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.. போருக்கு முன்பு சுமார் 70,000 மக்கள் வசித்து பாக்முட் நகரில், பல மாதங்களாக போர் தொடர்வதால் பெரும்பாலான இடங்கள் அழிக்கப்பட்டுள்ளன.. பலரும் உயிரிழந்தனர்.. ரஷ்ய தாக்குதல்களில் பெரும்பாலானவை பாக்முட் மற்றும் டொனெட்ஸ்கில் உள்ள மற்ற நகரங்கள் மற்றும் கிராமங்களை மையமாகக் கொண்டிருந்தாலும், ரஷ்ய எல்லைக்கு அருகிலுள்ள வடக்கு பிராந்தியங்களில் 20 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மீது ரஷ்ய படைகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..

இதற்கிடையில், உக்ரைன் ஏவிய ஆளில்லா விமானங்கள் ரஷ்ய எல்லைக்குள் பறந்ததையடுத்து, எல்லையில் பாதுகாப்பை அதிகரிக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார். ட்ரோன்கள் எந்த ஒரு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று புடின் அறிவுறுத்தி உள்ளார்..

இதுகுறித்து அதிகாரிகளுடன் உரையாற்றிய புடின் “ உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகளால் அதிகரித்து வரும் உளவு மற்றும் நாசவேலைகளை எதிர்ப்பதற்கு ரஷ்ய பாதுகாப்பு படைகள் தீவிரமாக செயல்பட வேண்டும்.. உள்கட்டமைப்பின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்.. மேலும் ரஷ்யாவில், மேற்கத்திய நாடுகளின் பாதுகாப்பு சேவைகள் மூலம் நடத்தப்படும் பயங்கரவாத அல்லது தீவிரவாத செயல்கள் புத்துயிர் பெறுவதை தடுக்க வேண்டும்..” என்று தெரிவித்தார்..

மேலும் ரஷ்யாவிற்குள் சட்டவிரோத ஆயுதங்கள் நுழைவதை தடுக்க வேண்டும் எனவும், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் 4 பிராந்தியங்களில் பாதுகாப்பை வலுப்படுத்தவும் புடின் அறிவுறுத்தினார்.. எனினும் ஐ.நா சபையின் பெரும்பாலான நாடுகள் புடினின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்று கண்டித்துள்ளன.

Maha

Next Post

ஆஸ்திரேலிய போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்…….!

Wed Mar 1 , 2023
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சார்ந்தவர் முஹம்மது ரஹ்மதுல்லா சையது அஹ்மது 2019 ஆம் வருடம் விசிட்டிங் விசாவில் ஆஸ்திரேலியாவிற்கு சென்ற இவர் அங்கு இருக்கக்கூடிய உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார் இந்த சூழ்நிலையில், சிட்னி மேற்கு ரயில் நிலையத்தில் நேற்று தொடர்வண்டிக்காக காத்திருந்த போது 28 வயதான தூய்மை தொழிலாளர் ஒருவரை ரஹமத்துல்லா கத்தியால் குத்தி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து, அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து இரண்டு காவல்துறை சார்ந்தவர்கள் […]

You May Like