உக்ரைன் உடனான போரில் ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது..
உக்ரைனில் கடுமையான போர் நடந்து வரும் நிலையில் அணு ஆயுத தாக்குதல் குறித்து ரஷ்யா தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. இதனிடையே, அணு ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது என்று ரஷ்யாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.. உக்ரைனில் ரஷ்ய ராணுவம் அணு ஆயுதங்க்ளை பயன்படுத்தினால், அது மிக கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.. வாஷிங்டன் போஸ்ட் செய்தி ஆதாரங்களை மேற்கோள் காட்டி இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் ரஷ்யா தொடர்ந்து துப்பாக்கி குண்டுகளை பொழிந்து அணுகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வரும் இந்த சூழலில் அமெரிக்கா தொடர்ந்து இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. உக்ரைன் நிலத்தைப் பாதுகாக்க அணுகுண்டு வீச ரஷ்யா தயாராக உள்ள நிலையில், அதற்கு பதிலடி கொடுக்க ‘அணுகுண்டு உட்பட எந்த ஆயுதத்தையும் பயன்படுத்த முடியும்’ என்று ரஷ்யாவிற்கு இந்த தனிப்பட்ட செய்தி தொடர்ந்து அனுப்பப்பட்டு வருவதாக அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதனிடையே போரை தீவிரப்படுத்த, ரஷ்யாவின் இராணுவத்தை அணிதிரட்ட புடின் உத்தரவிட்ட நிலையில், அவருக்கு எதிராக ரஷ்யாவில் பாரிய போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில், ரஷ்ய முன்னாள் அதிபரும், புடின் உதவியாளருமான டிமிட்ரி மெட்வடேவ், கிழக்கு உக்ரைனில் உள்ள நிலம் பொதுவாக்கெடுப்புக்குப் பிறகு ரஷ்யாவில் ஏற்றுக்கொள்ளப்படும் என்று கூறினார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த உக்ரைன் பகுதிகள் முழுமையாக பாதுகாக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்திருந்தார்.
இந்த புதிய ரிசர்வ் ராணுவத்தை மட்டுமல்ல, அணு ஆயுதம் உட்பட எந்த ஆயுதத்தையும் ரஷ்யா பயன்படுத்தும் திறன் கொண்டது என்று மெட்வடேவ் கூறினார். “ரஷ்யா தனது பாதையைத் தேர்ந்தெ.. இனி அதிலிருந்து திரும்பவும் வழியில்லை. ரஷ்யாவின் பிராந்திய பாதுகாப்பிற்கு அணு ஆயுதங்கள் உட்பட நான் எல்லா வழிகளையும் பயன்படுத்துவேன..” என்று கூறியுள்ளார்..