கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளருமான சிங்கை ராமச்சந்திரனின் தந்தையுமான சிங்கை கோவிந்தராஜனின் 25-வது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய எஸ்.பி.வேலுமணி, ”மறைந்த சட்டமன்ற உறுப்பினர் சிங்கை கோவிந்தராஜன் குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டார். மேலும் யாரெல்லாம் கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு எல்லாம் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது. யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல் வருகின்றன. அதையெல்லாம் நான் பார்ப்பதில்லை. ஆனால், அந்த தகவலை பார்த்து அண்ணன் அம்மன் அர்ஜூணன் கோவப்பட்டார் என்றும் அதை பற்றியெல்லாம் பேசினால் நமக்கு நேரம் வேஸ்ட் என்றும் குறிப்பிட்டார்.
அதிமுக என்பது தாய் வீடு, அனைவரும் தாய் வீட்டிற்கு தான் வருவார்கள். யாரும் வெளியே போகமாட்டார்கள். அதிமுக உலகிலேயே 7-வது பெரிய கட்சி. சாதாரண குடும்பத்தில் பிறந்த நம்மை எம்.எல்.ஏ வாக, அமைச்சராக மாற்றி அழகு பார்த்தவர் அம்மா. வெறும் 3, 4 சதவீதம் வாக்காளர்கள் உள்ள பாஜகவில் நாம் சேர போகிறோம் என்று கூறினால் நாம் பதில் கூற வேண்டுமா? அதிமுக தமிழகத்தில் 35 முதல் 40 சதவீத வாக்காளர்கள் உள்ள கட்சி. இதற்கெல்லாம் பதில் கூற வேண்டாம். அம்மன் அர்ஜூணன் அவர்களே, டோன் கேர் (Don’t care) என விட்டுச் செல்லுங்கள். கவலை படாதீர்கள். நம்மை பற்றி தொண்டர்களுக்கும், மக்களுக்கும் தெரியும்.
Read More : PM Modi | ’திமுகவால் அரசியலுக்கு இழுக்கு’..!! ’தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாடுபடவில்லை’..!!
பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்துள்ள நமக்கு காலரை தூக்கி சென்று நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகளை கேட்கும் தகுதி உள்ளது. அவர்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை. எடப்பாடியாருக்கு அனைத்து தொகுதிகளிலும் வெற்றியை தேடி தருவது தான் லட்சியம்” என்று தெரிவித்தார்.
English Summary : Former minister SP Velumani explains about joining BJP