fbpx

ஏ.ஆர்.ரகுமான் டைமண்ட்.. அவரை யாருடனும் தொடர்புபடுத்தி பேசாதீங்க..!! – விவாகரத்து குறித்து விளக்கம் அளித்த சாய்ரா பானு

ஏ.ஆர்.ரகுமான், சாய்ரா பானுவும் பிரிவதாக அறிவித்துள்ள செய்தி தான் தமிழ் திரையுலகில் விவாதப் பொருளாக மாறி உள்ளது. 29 ஆண்டு கால திருமண உறவில் இருந்து தானும் தனது மனைவி சாய்ரா பானுவும் பிரிவதாக அறிவித்தனர். இவர்கள் தங்களது பிரிவினை அறிவித்த மறுநாளே ஏ.ஆர். ரகுமான் இசைக்குழுவில் இருக்கும் பேஸ் கிட்டாரிஸ்ட் மோனிகா தே-வும் தனது கணவரைப் பிரிவதாக அறிவித்தார். உடனே பலரும் பலவிதமாக அவதூறு கருத்துகளையும் சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் பரப்பினர்.

தற்போது ஏ.ஆர். ரகுமானை பிரிந்த சாய்ரா பானு ஏ.ஆர். ரஹ்மான் குறித்து அவதூறுகளைப் பரப்ப வேண்டாம் எனக் கூறி வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களாவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதால் சாய்ரா மும்பையில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறாராம். தன் உடல்நிலை காரணமாகவே தான் ஏ.ஆர்.ரகுமானை விவாகரத்து செய்து பிரிவதாக அவர் அந்த ஆடியோவில் கூறி இருக்கிறார்.

மேலும் ஏ.ஆர்.ரகுமான் அற்புதமான மனிதர் என்று தெரிவித்துள்ள அவர், அவரை யாருடனும் தொடர்புபடுத்தி பேசாதீர்கள் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். அவரை வாழ்நாள் முழுவதும் நம்புவேன், எங்களது விவாகரத்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அவர் வைரம் போன்ற மனிதர் என்று தன்னுடைய கணவரை புகழ்ந்து சாய்ரா பானு பேசி இருக்கிறார்.

29 வருட திருமண வாழ்க்கை : குஜராத்தை சேர்ந்த சாயிரா பானுவுக்கும் ஏ.ஆர். ரகுமானுக்கும் பெரியவர்கள் சம்மதத்துடன் கடந்த 1995 ஆம் ஆண்டு சென்னையில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு கதீஜா, ரஜீமா என்ற இரு மகள்களும் அமீன் என்ற ஒரு மகனும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி 29 ஆண்டுகள் ஆன நிலையில் இருவரும் அன்னோன்யமான தம்பதியாகவே உலா வந்தனர். எந்த பேட்டியாக இருந்தாலும் வெட்கத்துடன் தங்கள் காதலை வெளிப்படுத்தி வந்தனர். இந்த நிலையில்தான் சாயிரா பானு, கணவர் ஏ.ஆர்.ரகுமானை பிரிவதாக அறிவித்தார்.

Read more ; செம சம்பவம் லோடிங்.. தமிழகத்தில் கனமழை கொட்ட போகுது..!! – வானிலை மையம் அலர்ட்

English Summary

Saira Banu explains about her divorce with AR Rahman

Next Post

லட்சத்தில் வருமானம்.. காளான் தொழில் தொடங்குவது எப்படி? எவ்வளவு செலவாகும்?

Sun Nov 24 , 2024
Income in lakhs.. How to start a mushroom business? How much does it cost?

You May Like