ஜப்பானில் அலுவலக நேரத்தில் புகை பிடிக்க இடைவேளை எடுத்ததற்காக அரசு ஊழியர் ஒருவருக்கு ஊதிய குறைப்புடன் சுமார் 1.44 மில்லியன் யென் அபராதம் விதிக்கப்பட்டது..
ஜப்பானில் உள்ள ஒசாகா நகரில் உலகிலேயே மிகவும் கடுமையான புகைபிடித்தல் சட்டங்கள் நடைமுறையில் உள்ளன.. 2008 ஆம் ஆண்டில், அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் மற்றும் அரசாங்க வளாகங்களில் புகைப்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.. மேலும் 2019 ஆம் ஆண்டு, முதல் அரசு ஊழியர்கள் பணியில் இருக்கும் போது புகை பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 61 வயதான ஜப்பானிய அரசு ஊழியர் ஒருவர் பணியில் இருக்கும் போது, 14 ஆண்டுகளில் 4,500 முறை புகைபிடிக்க இடைவெளி எடுத்ததாக கூறப்படுகிறது…
அந்த அரசு ஊழியர் மீதும், மாகாணத்தின் நிதித் துறையில் பண்யாற்றுக்கும் இரண்டு சக ஊழியர்களுக்கும் எதிராக மாகாண அரசு அதிகாரிகள் கடும் நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.. ஏற்கனவே பல முறை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், வேலை நேரத்தில் மீண்டும் மீண்டும் புகைபிடித்ததற்காக அந்த 3 பேருக்கும் ஆறு மாதங்களுக்கு 10 சதவீத ஊதியக் குறைக்கப்படும் என்று அறிவுறுத்தினர்..
2022ல், குற்றம்சாட்ட மூவரும் ரகசியமாக புகையிலையை பதுக்கி வைத்திருப்பதாக மனிதவள அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பிறகு ஊழியர்களை அவர்களது மேற்பார்வையாளர் வரவழைத்து, மீண்டும் புகைபிடித்தால் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அவர்களை எச்சரித்தார். இருப்பினும், மூவரும் புகைபிடிப்பதைத் தொடர்ந்தனர்.. அந்த மூவரில், 61 வயதான அரசு ஊழியருக்கு ஊதியக் குறைப்புடன், கடும் அபராதமும் விதிக்கப்பட்டது.. தனது சம்பளத்தில் இருந்து 1.44 மில்லியன் யென் (இந்திய மதிப்பில் சுமார் 8 கோடி) பணத்தை திரும்ப தர வேண்டும் என்று அந்த நபருக்கு உத்தரவிடப்பட்டது. அந்த நபர் 355 மணி நேரம் 19 நிமிடம் புகைபிடித்ததாக மாகாண அரசு தெரிவித்தது.
கடந்த 2019 ஆம் ஆண்டு, ஒசாகாவில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் சுமார் 3,400 முறை புகைபிடிக்க இடைவேளைகளை எடுத்தது கண்டறியப்பட்டதையடுத்து, தற்காலிக ஊதியக் குறைப்புடன் அபராதம் விதிக்கப்பட்டது.. மேலும் தனது சம்பளத்தில் ஒரு மில்லியன் யென் தொகையை கல்வி அமைச்சகத்திற்கு அவர் திருப்பித் தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.