fbpx

மாதம் ரூ.1,35,100 சம்பளம்..!! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

தமிழ்நாடு தடயவியல் அறிவியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய இளநிலை அறிவியல் அலுவலர் பதவிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையயம் வெளியிட்டுள்ளது.

காலியிடங்கள் எண்ணிக்கை: 31

வயது வரம்பு: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் பொது பிரிவு விண்ணப்பதாரர், 01.07.2023 அன்று 18 -32 வயதுக்குள் இருக்க வேண்டும். ஏனைய பிரிவினருக்கும், அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பு இல்லை.

கல்வித் தகுதி: தடவியல் அறிவியல் படிப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் (அல்லது) இயற்பியல், வேதியியல், உயிரியியல், இயற்பியல் & வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.36,900 முதல் ரூ.1,35,100 வரை

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் மற்றும் வாய்மொழித் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், பணியிட ஒதுக்கீடு விதி ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு முறை மேற்கொள்ளப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி..? www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகிய இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.

நிரந்தரப் பதிவு: விண்ணப்பிக்கும் முன்பு ஆதார் எண் மூலம் ஒருமுறை பதிவு எனப்படும் நிரந்தரப்பதிவு (OTR) மற்றும் தன்விவரப்பக்கம் (Dashboard) ஆகியன கட்டாயமாகும். விண்ணப்பதாரர்கள் நிரந்தர பதிவு மூலம் பதிவுக்கட்டணமாக ரூ.150/- ஐ செலுத்தி, பதிவு செய்து கொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.05.2023

Chella

Next Post

உதவி செய்யாத நண்பரை போட்டு தள்ளிய சக நண்பர்கள்…..! ஓசூர் அருகே பரபரப்பு……!

Tue May 2 , 2023
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சானசத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் முபாரக் இவர் ஓசூரில் வெல்டிங் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இத்தகைய நிலையில், இவர் சில நாட்களுக்கு முன்னர் ஓசூர் ஆர்பி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் எதிரே இருக்கின்ற எம்ஜிஆர் சந்தையில் ஒரு கட்டிடத்தின் மாடியில் மது பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்தார். இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவருடைய உடலை […]

You May Like