சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியின் பெயர் : Office Assistant, Residential Assistant, Room Boy, Sweeper, Gardener, Waterman, Sanitary Worker, Watchman, Chobdar ஆகிய பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மொத்த காலிப்பணியிடங்கள் : 392
பணியிடம் : சென்னை உயர்நீதிமன்றம் (தமிழ்நாடு)
கல்வித் தகுதி :
மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும்.
வயது வரம்பு :
குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி உள்ளிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
சம்பளம் : மாதம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை :
* எழுத்து தேர்வு
* திறன் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பதாரர்கள் www.mhc.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ இணையதளம் : https://www.mhc.tn.gov.in/recruitment/login
விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.05.2025
Read More : திருநங்கைகளே..!! மாதந்தோறும் ரூ.1,500 உங்களுக்கு வரவில்லையா..? அப்படினா உடனே அப்ளை பண்ணுங்க..!! தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம்..!!