fbpx

மாதம் ரூ.93,000 வரை சம்பளம்..!! பிளஸ்2 தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!! 3,712 காலிப்பணியிடங்கள்..!!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள இளநிலை எழுத்தர், இளநிலை செயலக உதவியாளர், தரவு உள்ளிடும் பணியாளர் (டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்), தரவு உள்ளிடும் பணியாளர் கிரேடு ‘ஏ’ நிலை என 3,712 பதவிகளுக்கான ஒருங்கிணைந்த மேல்நிலைத் (10+2) தேர்வு, 2024-க்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

பணியிட விவரங்கள் :

மொத்த காலியிடங்கள் : 3712

தேர்வு : ஒருங்கிணைந்த மேல்நிலைத் (10+2) தேர்வு, 2024

பதவி : Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA)

ஊதியம்: மாதம் ரூ.19,900 – ரூ.63,200 வரை வழங்கப்படும்

பதவி: Data Entry Operator (DEO)

சம்பளம்: மாதம் ரூ.25,500-81,100 மற்றும் நிலை -5 (ரூ.29,200 – ரூ.92,300 வரை)

பதவி: Data Entry Operator, Grade ‘A’ நிலை -4

சம்பளம்: மாதம் ரூ. 25,500 – ரூ.81,100

வயது: 1.8.2024 தேதியின்படி 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு வழங்கப்படும்.

கல்வித்தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். பெண்கள், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு

தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, வேலூர் மற்றும் புதுச்சேரி

விண்ணப்பிக்கும் முறை: https://ssc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 7.5.2024

Read More : Oily Foods | எண்ணெய் அதிகமுள்ள உணவுகளை சாப்பிட்டுவிட்டீர்களா..? இனி மறக்காம இதை பண்ணுங்க..!!

Chella

Next Post

TN 12th Result: 5,161 மாற்றுத்திறன் மாணவர்கள், 115 சிறைவாசிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்..!

Mon May 6 , 2024
TN 12th Result: தமிழ்நாட்டில், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் சுமார் 7,80,550 மாணவ-மாணவிகள் எழுதினர். இதில் தனித்தேர்வர்கள் 8,190 பேரும் அடங்குவர். விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்கி 13-ம் தேதி வரை நடைபெற்றது. மாணவா்கள் பெற்ற மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணியும் நிறைவு பெற்றது. இந்த நிலையில் தேர்வு […]

You May Like