fbpx

ஸ்டேட் பேங்க் ஆஃப் வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட கிளைகளில் தேர்தல் பத்திரங்கள் விற்பனை…!

2018 ஆம் ஆண்டு தேர்தல் பத்திரத் திட்டத்தை, 2018 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதியிட்ட அரசிதழ் அறிவிப்பு எண். 20-ஐ (நவம்பர் 7, 2022 தேதியிட்ட அரசிதழ் அறிவிப்பின்படி திருத்தப்பட்டது) பயன்படுத்தி மத்திய அரசு அறிவித்துள்ளது . இத்திட்டத்தின் விதிமுறைகள்படி, இந்தியக் குடிமகன் அல்லது இந்தியாவில் ஒருங்கிணைக்கப்பட்ட அல்லது நிறுவப்பட்ட ஒரு நபர் (அரசிதழ் அறிவிப்பின் பிரிவு எண். 2 (டி ) இல் வரையறுக்கப்பட்டுள்ளபடி) தேர்தல் பத்திரங்களை வாங்கலாம்.

மாதம் ரூ.36,000 சம்பளம்..!! SBI வங்கியில் சூப்பர் வேலை..!! மிஸ் பண்ணாம உடனே அப்ளை பண்ணுங்க..!!

தனிநபராக இருக்கும் ஒருவர், தனியாகவோ அல்லது மற்ற நபர்களுடன் கூட்டாகவோ தேர்தல் பத்திரங்களை வாங்கலாம். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 (43 இன் 1951) பிரிவு 29ஏ -இன் கீழ் பதிவு செய்யப்பட்ட, கடந்த பொதுத் தேர்தலில் மக்களவைக்கோ அல்லது சட்டமன்றத்திற்கோ மாநிலத்தின் மொத்த வாக்குகளில் ஒரு சதவீதத்திற்கும் குறையாத வாக்குகளைப் பெற்ற அரசியல் கட்சிகள் மட்டுமே, தேர்தல் பத்திரங்களைப் பெற தகுதியுடையவையாகும்.

தேர்தல் பத்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட வங்கியில் உள்ள வங்கிக் கணக்கு மூலம் மட்டுமே தகுதியான அரசியல் கட்சியால் பணமாக்க முடியும். 05.12.2022 முதல் 12.12.2022 வரை, 24-ஆம் கட்ட விற்பனையில், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, அதன் 29 அங்கீகரிக்கப்பட்ட கிளைகள் மூலம் தேர்தல் பத்திரங்களை வெளியிடுவதற்கும் பணமாக்குவதற்கும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து பதினைந்து நாட்களுக்குதான் செல்லுபடியாகும். செல்லுபடியாகும் காலம் முடிந்த பின் தேர்தல் பத்திரம் டெபாசிட் செய்யப்பட்டால், பணம் பெறும் எந்த அரசியல் கட்சிக்கும் பணம் செலுத்தப்பட மாட்டாது. தகுதியான அரசியல் கட்சி தனது கணக்கில் டெபாசிட் செய்யும் தேர்தல் பத்திரம் அதே நாளில் வரவு வைக்கப்படும்.

Vignesh

Next Post

நீங்க வீடு கட்ட போறீங்களா...? அரசு வழங்கும் மானியம் எப்படி பெறுவது...? முழு விவரம் இதோ...!

Sun Dec 4 , 2022
மத்திய அரசு திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு மானியம் பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம். இந்தியாவில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், மிக முக்கிய திட்டமாக பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் உள்ளது. இத்திட்டத்தில், வீடற்ற ஏழை எளிய மக்கள் கடனுதவி பெறுவதற்கு விண்ணப்பித்தால் ரூபாய் 2.67 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டம் […]

You May Like