மத்திய அரசு இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுவதை ஊக்குவிக்கும் திட்டத்துடன் புதிய சேவையை துவங்கியுள்ளது. இந்த வருடம் சுதந்திர தினத்திற்கு பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் அரசுக்கும் மக்களுக்குமான நேரடி தொடர்பை உருவாக்கும் ஒரு திட்டத்தை இந்திய தபால் துறை உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு குடிமகனும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கக்கப்பட்ட ஹர்கர் திரங்கன் அபியான் கீழ் தபால்துறை அதன் 1.60 லட்சம் தபால் நிலையங்கள் மூலம் தேசியக் கொடிகளை விற்பனை செய்ய உள்ளது.
ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட் 15 வரையிலான காலக்கட்டத்தில் இந்திய மக்கள் தேசியக் கொடியை தபால் துறையின் “ePostOffice” வசதி மூலம் வாங்கலாம். உத்தர பிரதேச மாநிலத்தில் இருக்கும் தபால் துறை அலுவலகத்தில் இப்போதே தேசிய கொடி விற்பனையை துவங்கியுள்ளது.