சேலம் மாவட்டத்தில் உள்ள வீராணம் பகுதியில் 40 வயதான ஒரு மாற்றுத்திறனாளி பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு நேற்று அதிகாலை நேரத்தில் திடீரென வயிற்றுவலி ஏற்பட்டதால் அந்த பெண்ணின் உறவினர்கள் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.
ஆனால், அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 8 மாத கர்ப்பம் என்று தெரிவித்துள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அந்த பெண் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில் பனைமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த 63 வயதான சடையன் என்ற முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாற்றுத்திறனாளி பெண்ணை அவர் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பம் ஆக்கியது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.